மிளகாய் சட்டினி | Red Chilli Chutney in Tamil

எழுதியவர் Kurunji Kathambam  |  19th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Red Chilli Chutney by Kurunji Kathambam at BetterButter
மிளகாய் சட்டினிKurunji Kathambam
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    1

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

421

0

மிளகாய் சட்டினி recipe

மிளகாய் சட்டினி தேவையான பொருட்கள் ( Ingredients to make Red Chilli Chutney in Tamil )

  • கரிவேப்பிலை 1/2 கொத்து
  • உளுத்தம்பருப்பு 1/2 தேக்கரண்டி
  • கடுகு 1/2 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் 1/2 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • புளி 1/2 நெல்லிக்காய் அளவு
  • சிவப்பு மிளகாய் 2
  • பூண்டு பற்கள் 2
  • சின்ன வெங்காயம் - 1 கப்

மிளகாய் சட்டினி செய்வது எப்படி | How to make Red Chilli Chutney in Tamil

  1. சிவப்பு மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றோடு கொஞ்சம் தண்ணீர் பயன்படுத்தி மிக்சி ஜாரில் அரைத்துக்கொள்ளவும்.
  2. அதன்பின் நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் பூண்டு பற்களையும் சேர்க்கவும். கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும். சட்டினியை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொறியும்வரை காத்திருக்கவும். அதன்பிறகு உளுத்தம்பருப்பும் கரிவேப்பிலையையும் சேர்க்கவும். சில விநாடிகள் வதக்கவும்.
  4. இந்தத் தாளிப்பை சட்டினியில் ஊற்றி ஒன்றாக நன்றாகக் கலக்கவும்.

எனது டிப்:

இந்த சட்டினிக்கு சின்னவெங்காயம் மட்டுமே நல்ல ருசியைக் கொடுக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

Reviews for Red Chilli Chutney in tamil (0)