வீடு / சமையல் குறிப்பு / பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

Photo of Butter choco chips cookies by Krishnasamy Vidya Valli at BetterButter
645
4
0.0(0)
0

பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

Mar-11-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் மிகவும் விரும்பும் குக்கீஸ் வீட்டிலேயே எளிதில் செய்யலாம்.ஒருவருக்கு இரண்டு வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மைக்ரோவேவிங்
  • அக்கம்பனிமென்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெண்ணெய் -1/4 கப்
  2. சீனி -1/4 கப்
  3. சாக்கோ சிப்ஸ் -1/4 கப்
  4. மைதா மாவு -1/2 கப்
  5. பேக்கிங் சோடா -1/4 தேக்கரண்டி
  6. வெனிலா எஸன்ஸ் -1/2 தேக்கரண்டி
  7. உப்பு -1/2 சிட்டிகை
  8. கான்பிளவர் -1/2 தேக்கரண்டி
  9. பால் -2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெண்ணெய் மற்றும் சீனியை சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ளவும்
  2. அதோடு மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. அப்படியே அதை அரைமணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்
  4. வெளியே எடுத்து பத்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  5. மேல்புறம் லேசாக தட்டிக்கொள்ளவும்
  6. மைக்ரோ வேவ் அவனை 180டிகிரியில் பிரீகீட் செய்யவும்
  7. பேக்கிங் டிரேயில் பேக்கிங் பேப்பர் விரித்து தட்டிய குக்கீஸை வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  8. ஒரு குக்கிக்கும் இன்னொரு குக்கிக்கும் இடைவெளி விட்டு வைக்கவும் பேக் செய்யும் போது விரிவடைய இடம் தேவை
  9. வெளியே எடுத்து சூடு ஆறியபின் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்