ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) | Shakarpara (Sweet Diamond Cuts) in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  20th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Shakarpara (Sweet Diamond Cuts) by Menaga Sathia at BetterButter
ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்)Menaga Sathia
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

909

0

Video for key ingredients

  ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) recipe

  ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) தேவையான பொருட்கள் ( Ingredients to make Shakarpara (Sweet Diamond Cuts) in Tamil )

  • எண்ணெய் - பொரிப்பதற்கு
  • உப்பு - 1/8 தேக்கரண்டி
  • மைதா - 2 மற்றும் 1/4 கப்
  • தண்ணீர் - 1/2 கப்
  • சர்க்கரை - 1/2 கப்
  • நெய் - 1/2 கப்

  ஷாகர்பரா (இனிப்பு டயமண்ட் துண்டுகள்) செய்வது எப்படி | How to make Shakarpara (Sweet Diamond Cuts) in Tamil

  1. முதலில் ஒரு கடாயில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க. இன்னொரு பாத்திரத்தில், தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து மெதுவாக சூடுபடுத்தவும். இனிப்புத் தண்ணீரை உருக்கிய நெய்யில் ஊற்றவும்.
  2. கலவை அறையின் வெப்பத்திற்கு வரட்டும், அதனோடு உப்பைச் சேர்க்கவும். மெதுவாக மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மென்மையான மாவாகத் தயாரித்துக்கொள்ளவும். -5 பெரிய அளவு உருண்டைகளைச் செய்து, மெலிதான வட்டவடிவில் உருட்டிக்கொள்க.
  3. சமமற்ற விளிம்புகளை வெட்டியெடுத்து, பின்னர் கத்தியை அல்லது பீசா கட்டரைப் பயன்படுத்தி 1 இன்ச் அகலமான பட்டைகளை வெட்டிக்கொள்க. பட்டைகளை கிடைமட்டமாக வெட்டிக்கொள்ளவும், சதுரம் அல்லது டயமண்ட் துண்டுகளைப் பெறுவதற்கு. (நான் இங்கே சதுர வடிவத்தில் வெட்டினேன்)
  4. இதற்கிடையில் கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி துண்டுகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதன்பின்னர் முழுமையாக ஆறவிட்டு ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்துக்கொள்ளவும்.

  எனது டிப்:

  துண்டுகளையும் மாவையும் உலராமல் காக்க ஒரு துணியால் மூடவும். மாவைத் தயார் செய்த உடனேயே பிஸ்கட்டைத் தயாரிக்கவும். இல்லையேல் மாவில் உள்ள நெய் கட்டிப்போய்விடும், உருட்ட முடியாது.

  Reviews for Shakarpara (Sweet Diamond Cuts) in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.