வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் அல்வா

Photo of Beetroot halwa by T.n. Lalitha at BetterButter
457
4
0.0(0)
0

பீட்ரூட் அல்வா

Mar-12-2018
T.n. Lalitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் அல்வா செய்முறை பற்றி

சுவையான பீட்ரூட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய பீட்ரூட் - 2 கப்
  2. கொதிக்க வைத்த பால் - 1 கப்
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. நெய் - 3 டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
  6. பாதாம் - 4

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக வதக்கி விட வேண்டும்.
  2. பின்னர் அதில் பால் சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயில் மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
  3. பின் பால் வற்றும் வரை அடுப்பில் வைத்து, பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்
  4. கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும். பின் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். மற்றொரு அடுப்பில், சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்து பிரட்டினால், சுவையான பீட்ரூட் அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்