மட்டர் பனீர் | Mutter paneer in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  12th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Mutter paneer recipe in Tamil,மட்டர் பனீர், Krishnasamy Vidya Valli
மட்டர் பனீர்Krishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3

0

மட்டர் பனீர் recipe

மட்டர் பனீர் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutter paneer in Tamil )

  • பனீர் -8 முதல் 10 துண்டுகள்
  • பனீரை ஷாலோபிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்
  • பச்ச பட்டாணி -1/2 கப்
  • வெங்காயம் -1 பெரியது
  • தக்காளி -2
  • கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  • உப்பு -1/2 தேக்கரண்டி
  • காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  • தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  • தாளிக்க
  • எண்ணெய் -2 தேக்கரண்டி
  • சீரகம் -1/2 தேக்கரண்டி
  • பட்டை -1 சிறிய துண்டு
  • ஏலக்காய் கிராம்பு -தலா 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி

மட்டர் பனீர் செய்வது எப்படி | How to make Mutter paneer in Tamil

  1. பச்ச பட்டாணியை சிறிது தண்ணீர் விட்டு பாதி வேகவைத்து எடுக்கவும்
  2. வெங்காயத்தை ஒன்று இரண்டாக மிக்ஸியில் அரைக்கவும்
  3. தக்காளியை அரைத்துக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு பனீரை ஷாலோபிரை செய்து எடுத்துக்கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த தக்காளியை சேர்க்கவும்
  7. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  8. பட்டாணி சேர்க்கவும்
  9. கிரேவி கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து விட்டு பிரை செய்த பனீரை சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

எனது டிப்:

பிரஷ் கிரீம் சேர்த்தால் கூடுதல் சுவை

Reviews for Mutter paneer in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.