வீடு / சமையல் குறிப்பு / மட்டர் பனீர்

Photo of Mutter paneer by Krishnasamy Vidya Valli at BetterButter
413
4
0.0(0)
0

மட்டர் பனீர்

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மட்டர் பனீர் செய்முறை பற்றி

சப்பாத்தி/நாண்/ரைஸ் இப்படி எதற்கும் தொட்டுக்கொள்ளும் சைட் டிஷ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பனீர் -8 முதல் 10 துண்டுகள்
  2. பனீரை ஷாலோபிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்
  3. பச்ச பட்டாணி -1/2 கப்
  4. வெங்காயம் -1 பெரியது
  5. தக்காளி -2
  6. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -1 தேக்கரண்டி
  7. உப்பு -1/2 தேக்கரண்டி
  8. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா -1/4 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  11. தனியா பொடி -1/4 தேக்கரண்டி
  12. தாளிக்க
  13. எண்ணெய் -2 தேக்கரண்டி
  14. சீரகம் -1/2 தேக்கரண்டி
  15. பட்டை -1 சிறிய துண்டு
  16. ஏலக்காய் கிராம்பு -தலா 2
  17. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பச்ச பட்டாணியை சிறிது தண்ணீர் விட்டு பாதி வேகவைத்து எடுக்கவும்
  2. வெங்காயத்தை ஒன்று இரண்டாக மிக்ஸியில் அரைக்கவும்
  3. தக்காளியை அரைத்துக்கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு பனீரை ஷாலோபிரை செய்து எடுத்துக்கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. அரைத்த தக்காளியை சேர்க்கவும்
  7. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்க்கவும்
  8. பட்டாணி சேர்க்கவும்
  9. கிரேவி கெட்டியானவுடன் அடுப்பை அணைத்து விட்டு பிரை செய்த பனீரை சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்