வீடு / சமையல் குறிப்பு / பனீர் குங்குமப்பூ பால் கிரேவி

Photo of Paneer Saffron Milk Gravy by Sowmya Sundar at BetterButter
233
5
0.0(0)
0

பனீர் குங்குமப்பூ பால் கிரேவி

Mar-12-2018
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் குங்குமப்பூ பால் கிரேவி செய்முறை பற்றி

பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் -1 கப்
  2. பால் - 1 1/2 கப்
  3. தயிர் -3 டேபிள் ஸ்பூன்
  4. வெங்காயம்-2
  5. இஞ்சி - 1 துண்டு
  6. பூண்டு- 4 பல்
  7. முந்திரி பருப்பு-10(தண்ணீரில் ஊற வைக்கவும்)
  8. குங்கும பூ -1 டீஸ்பூன்
  9. சீரகம்-1 டீஸ்பூன்
  10. கஸுரி மேத்தி-1 டீஸ்பூன்
  11. பிரிஞ்சி இலை -1
  12. மஞ்சள் தூள்-1 டீஸ்பூன்
  13. உப்பு
  14. சர்க்கரை-1/2 டீஸ்பூன்
  15. வெண்ணெய் -1 டேபிள் ஸ்பூன்
  16. எண்ணெய்-3 டீஸ்பூன்
  17. மசாலா பொடி செய்ய:
  18. மிளகாய் -3
  19. மல்லி-1 டீ ஸ்பூன்
  20. மிளகு- 1 டீ ஸ்பூன்
  21. சோம்பு-1 டீ ஸ்பூன்
  22. பட்டை -1
  23. கிராம்பு-2
  24. ஏலக்காய் -1

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு மசாலா பொடி செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் வறுத்து கொள்ளவும். பின்னர் அதை மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  2. கடாயில் மேலும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஊற வைத்த முந்திரி பருப்பு மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் பிரிஞ்சி தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த மசாலா பொடி சேர்த்து வெண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  4. பின்னர் இதில் குங்கும பூ ,பனீர் மற்றும் பால் சேர்க்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.
  5. பனீர் வெந்து கிரேவி கெட்டியாக ஆனதும் கஸுரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்