வீடு / சமையல் குறிப்பு / பனீர் தயிர் கிரேவி

Photo of Paneer curd gravy by Krishnasamy Vidya Valli at BetterButter
570
5
0.0(0)
0

பனீர் தயிர் கிரேவி

Mar-12-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பனீர் தயிர் கிரேவி செய்முறை பற்றி

எளிமையான நேரம் அதிகம் எடுக்காத சைட்டிஷ் வெரைட்டி இது. மைல்டான சைட்டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பனீர் -15 முதல் 20 துண்டுகள்
  2. அரைக்க
  3. முந்திரி பருப்பு , பாதாம் -தலா 5
  4. வெங்காயம் -1
  5. பச்ச மிளகாய் -2
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 தேக்கரண்டி
  7. ஏலக்காய் -3
  8. கிரேவிக்கு தேவையானவை
  9. தயிர் -1 கப்
  10. கடலை மாவு -1 தேக்கரண்டி
  11. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  12. காஷ்மீர் சில்லி பவுடர் -1/2 தேக்கரண்டி
  13. கரம்மசாலா -1/2 தேக்கரண்டி
  14. உப்பு -1 தேக்கரண்டி
  15. கஸூரி மேத்தி டிரை லீவ்ஸ் -1 தேக்கரண்டி
  16. எண்ணெய் -2 தேக்கரண்டி
  17. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாதாம் முந்திரி பருப்பை வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து தோல் உரித்து மிக்ஸியில் அரைக்கவும்.
  2. அதோடு அரைக்க கொடுத்த மற்ற பொருட்களை சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்
  3. கிரேவிக்கு கொடுத்தவற்றை (எண்ணெய் கொத்தமல்லி இலை தவிர)ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
  4. நன்றாக கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து பச்ச வாசனை போகும் வரை வதக்கவும்
  6. ஏற்கனவே செய்து வைத்த தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்
  7. பனீர் துண்டுகள் சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்