வீடு / சமையல் குறிப்பு / சீஸி பேக்டு மஷ்ரூம்ஸ்

Photo of Cheesy baked mushrooms by Subashini Krish at BetterButter
422
4
0.0(0)
0

சீஸி பேக்டு மஷ்ரூம்ஸ்

Mar-12-2018
Subashini Krish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சீஸி பேக்டு மஷ்ரூம்ஸ் செய்முறை பற்றி

காளான்களின் உள்ளே பனீர் மற்றும் சீஸ் அடைத்து செய்யும் இந்த உணவு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள். எளிதான செய்முறையும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பெரிய பட்டன் காளான் 15
  2. பனீர் 100 கிராம்
  3. சீஸ் 50 கிராம்
  4. இத்தாலியன் மசாலா 1 டீஸ்பூன்
  5. சிகப்பு மிளகாய் துகள்கள் 1/2 டீஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பூண்டு 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு தேவையான அளவு
  8. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. காளான் தண்டுகளை நீக்கி நன்கு கழுவிக் கொள்ளவும்
  2. தண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  3. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய காளான், சிகப்பு மிளகாய் துகள்கள்,இத்தாலிய மசாலா,பூண்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்
  4. அவனை 180 டிகிரிக்கு 10 நிமிடம் சூடு படுத்தவும்
  5. ஆறிய காளான் கலவையில் பனீரையும் சீஸயும் துருவி சேர்த்து நன்கு கலக்கவும்
  6. இதை தண்டு நீக்கிய காளான்களில் அழுத்தி அடைக்கவும்
  7. அனைத்து காளான்களையும் சிறிது வெண்ணெய் தடவி அவனில் 180 டிகிரியில் 15 நிமிடம் வேக வைக்கவும்
  8. தக்காளி சாஸ் அல்லது மயோனைஸ் உடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்