வெங்காய மல்லி சட்டினி | Vengaya Malli Chutney in Tamil

எழுதியவர் Jinoo Jayakrishnan  |  21st Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Vengaya Malli Chutney recipe in Tamil,வெங்காய மல்லி சட்டினி, Jinoo Jayakrishnan
வெங்காய மல்லி சட்டினிJinoo Jayakrishnan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

816

0

வெங்காய மல்லி சட்டினி recipe

வெங்காய மல்லி சட்டினி தேவையான பொருட்கள் ( Ingredients to make Vengaya Malli Chutney in Tamil )

  • 1/2 கப் சின்ன வெங்காயம், நறுக்கப்பட்டது
  • மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் 1 தேக்கரண்டி
  • கடுகு 1/2 தேக்கரண்டி
  • கொஞ்சம் கரிவேப்பிலை
  • உப்பு 1தேக்கரண்டி அல்லது சுவைக்கேற்ற அளவு
  • உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய் உடைத்தது 1 எண்ணிக்கை
  • எண்ணெய் 1 தேக்கரண்டி

வெங்காய மல்லி சட்டினி செய்வது எப்படி | How to make Vengaya Malli Chutney in Tamil

  1. குழவியில் 1/2 கப் வெங்காயத்தை கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். எடுத்து வைக்கவும்.
  2. 1/2 தேக்கரண்டி மிளகாய்த்தூளையும் 1/2 தேக்கரண்டி மல்லித்தூளையும் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகைப் பொறிக்கவும். பொறியட்டும். பிறகு உளுத்தம்பருப்பை சேர்க்கவும்.
  4. இவற்றோடு சிவப்பு மிளகாயையும் கரிவேப்பிலையையும் சேர்க்கவும். நன்றாக வதக்கவும். அதன்பிறகு மசாலாக் கலவை, உப்பு, அரைத்த வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  5. உங்கள் சட்டினி இப்போது தயார். அரைக்கவோ நறுக்கவோத் தேவையில்லை!

எனது டிப்:

சிறப்பானச் சுவைக்கு தேங்காய் எண்ணெயில் சமைக்கவும்.

Reviews for Vengaya Malli Chutney in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.