மும்பை பாவ் பஜ்ஜி | Mumbai Pav Bhaji in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  30th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mumbai Pav Bhaji by Anjana Chaturvedi at BetterButter
மும்பை பாவ் பஜ்ஜிAnjana Chaturvedi
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

5632

0

Video for key ingredients

  • Pav Buns

மும்பை பாவ் பஜ்ஜி recipe

மும்பை பாவ் பஜ்ஜி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mumbai Pav Bhaji in Tamil )

  • 4 தக்காளியின் சாந்து
  • 2 உருளைக்கிழங்கு
  • 275 கிராம் சுரைக்காய்
  • 1/2 கேரட்
  • 250 கிராம் ஊதா நிற முட்டைக்கோஸ்
  • 2 சிறிய குடமிளகாய்
  • 1/3 கப் பச்சைப் பட்டாளி வேகவைத்தது
  • 1 தேக்கரண்டி இஞ்சி துருவல்
  • 3 தேக்கரண்டி புதிய கொத்துமல்லி
  • 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  • 1.5 கப் தண்ணீர்
  • 4 தேக்கரண்டி வெண்ணெய்
  • 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 2.5 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்/ நாட்டு மிளகாய்த் தூள்
  • 3 தேக்கரண்டி பாவ் பஜ்ஜி மசாலா
  • 1/4 தேக்கரண்டி கருப்பு உப்பு
  • சுவைக்கேற்ற உப்பு

மும்பை பாவ் பஜ்ஜி செய்வது எப்படி | How to make Mumbai Pav Bhaji in Tamil

  1. உருளைக்கிழங்க, சுவைக்காய் ஆகியவற்றின் தோலை உரித்து நறுக்கிக்கொள்க. கேரட்டைச் சீவி வைத்துக்கொள்ளவும். குடமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் காலிபிளவரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அனைத்துக் காய்கறிகளையும் (குடமிளகாயைத் தவிர) 1.5 கப் தண்ணீரோடு 4-5 விசில்களுக்கு பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆறியதும், ஒருளைக்கிழங்கு மேஷரைக் கொண்டு அனைத்துக் காய்கறிகளையும் மசித்துக்கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, வெண்ணெயோடு நறுக்கிய குடமிளகாயைச் சேர்த்து, மிதமானச் சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.
  4. இஞ்சித் துருவல் தக்காளி சாந்தைச் சேர்த்துக்கொள்ளவும். மிதமானச் சூட்டில் வேகவைத்து மூடி வைக்கவும்.
  5. 1 தேக்கரண்டி வெண்ணெய் வேகவைத்து பட்டாணியை உலர் மசாலாக்களோடுச் சேர்த்து எண்ணெய் பக்கவாட்டிலிருந்து பிரியும்வரை கலக்கி வதக்கவும்.
  6. மசித்த காய்கறிகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க. பதத்தைச் சரிபார்ப்பவும். மூடியிட்டு சிம்மில் 10 நிமிடங்கள் விடவும்.
  7. பாவ்வை மொறுமொறுப்பாகும்வரை வறுத்து சூடான பஜ்ஜியுடன் பரிமாறவும்.

எனது டிப்:

அருமையானச் சுவையைக் கொடுப்பதால் பாவ் பஜ்ஜி மசாலாவைத் தவிர்க்காதீர்கள், நல்ல பிராண்ட் மசாலாவை முயற்சித்துப் பயன்படுத்தவும்

Reviews for Mumbai Pav Bhaji in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.