வீடு / சமையல் குறிப்பு / கோஸ் உசிலி (முட்டைக்கோஸ் மற்றும் பருப்புக் கறி)

Photo of Kos Usili (Cabbage and lentil curry) by Roli Books at BetterButter
1060
8
0.0(0)
0

கோஸ் உசிலி (முட்டைக்கோஸ் மற்றும் பருப்புக் கறி)

Mar-21-2016
Roli Books
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு (அர்ஹார் பருப்பு) 1 கப் / 160 கிராம்
  2. முட்டைக்கோஸ், நறுக்கப்பட்டது 300 கிராம்
  3. காய்ந்த மிளகாய் 6
  4. சுவைக்கேற்ற உப்பு அல்லது 2 தேக்கரண்டி/8 கிராம்
  5. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  6. மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி
  7. ரீபைண்டு எண்ணெய் 6 தேக்கரண்டி / 90 மிலி
  8. கடுகு ¼ தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. துவரம்பருப்பை வெந்நீரில் 25-30 நிமிட்ங்கள் ஊறவைக்கவும். வடிக்கட்டி கரடுமுரடாக காய்ந்த மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூளுடன் அரைத்துக்கொள்ளவும்.
  2. துவரம் பருப்புச் சாந்தை வேகவைக்கவும் (பிரஷர் குக்கரில் 2-3 விசில்களுக்கு). எடுத்து, விரல்களால் அல்லது ஒரு கரண்டியால் நசுக்கிக்கொள்ளவும்.
  3. முட்டைக்கோசைத் தனியாக வேகவைக்கவும் (அல்லது துவரம்பருப்பு சாந்தோடு வேகவைக்கவும்).
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, கடுகு பொறியும் வரை வதக்கவும். நசுக்கப்பட்டக் கலவையையும் சமைக்கப்பட்ட முட்டைக்கோசையும் சேர்க்கவும்.
  5. கலவையை உங்கள் விருப்பத்திற்கேற்ப கலக்கி வறுத்துக்கொள்ளவும் (சிலருக்கு உண்மையில் வறுத்தது பிடிக்கும், அதிகமாக வறுப்பதால் உலர்ந்துவிடுவதால் சிலருக்கு மென்மையாக இருப்பது பிடிக்கும்).

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்