மைசூர் பாகு | Melt in mouth mysorepak in Tamil

எழுதியவர் T.n. Lalitha  |  12th Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Melt in mouth mysorepak by T.n. Lalitha at BetterButter
மைசூர் பாகுT.n. Lalitha
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

3

1

மைசூர் பாகு recipe

மைசூர் பாகு தேவையான பொருட்கள் ( Ingredients to make Melt in mouth mysorepak in Tamil )

 • கடலை மாவு – 1 கப்
 • சர்க்கரை – 2 1/2 கப்
 • நெய் – 2 1/2 கப்

மைசூர் பாகு செய்வது எப்படி | How to make Melt in mouth mysorepak in Tamil

 1. கடலை மாவை நன்கு சலித்து, மிக லேசாக 2, 3 நிமிடங்கள் மட்டும் வறட்டு வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
 2. நெய்யை லேசான தீயில் நன்றாக உருக்கி வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை சிறிது நீர் சேர்த்து, அடுப்பில் சிம்மில் வைத்து, முழுவதையும் கரைய விடவும்.
 3. கரைவதற்கு முன் சூடு அதிகமானல் பாகு ஆகிவிடலாம். அதனால் தீயை மிகக் குறைந்த அளவிலேயே வைத்து முழுமையாகக் கரைக்க வேண்டும்.
 4. சர்க்கரை கரைந்ததும், கடலைமாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டிகளில்லாமல் கலந்து கொள்ளவும்
 5. மாவு கலந்து கொதிக்கத் தொடங்கியதும், நெய்யை நான்கைந்து பாகங்களாக தவணை முறையில் இறுக இறுக சேர்த்துக் கிளறவும்
 6. கடைசியில் எல்லா நெய்யும் சேர்த்தபின், கிளறிக்கொண்டே இருக்கையில் சேர்ந்தாற்போல் நன்கு கெட்டியாக ஒட்டாமல் வரும்போது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி ஒரு கரண்டியால் சீராகப் பரத்தி ஓரங்களை அழுத்தி விடவும். பொடித்த சர்க்கரையை சிறிது மேலே தூவி விடவும்
 7. நன்கு ஆறியதும் கத்தியால் கீறி வில்லைகள் போடலாம். மேலே பொடித்த சர்க்கரையை சேர்க்கலாம் (தேவையானால்)
 8. சுவையான வாயில் போட்டவுடன் கரையும் மைசூர்பாகு தயார்!!

எனது டிப்:

சுத்தமான நெய்யில் மட்டும் தான் செய்ய வேண்டும். டால்டா உபயோகிக்கக் கூடாது.

Reviews for Melt in mouth mysorepak in tamil (1)

Nagarathinam R2 years ago

Reply