வீடு / சமையல் குறிப்பு / பருப்பு அரைத்த வெண்டைக்காய் மோர் குழம்பு

Photo of Paruppu araitha vendaikai morkuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
612
3
0.0(0)
0

பருப்பு அரைத்த வெண்டைக்காய் மோர் குழம்பு

Mar-13-2018
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு அரைத்த வெண்டைக்காய் மோர் குழம்பு செய்முறை பற்றி

பலவிதமான மோர்குழம்புகளில் இது புது வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கெட்டி தயிர் -1 கப்
  2. வெண்டைக்காய் -6 முதல் 8
  3. உப்பு -1 தேக்கரண்டி
  4. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  5. அரைக்க
  6. துவரம் பருப்பு -2 மேஜைக்கரண்டி
  7. கடலைப்பருப்பு -1 மேஜைக்கரண்டி
  8. அரிசி -1 தேக்கரண்டி
  9. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  10. பச்ச மிளகாய் -2
  11. மிளகாய் வத்தல் -2 அல்லது 3
  12. சீரகம்-1/2 தேக்கரண்டி
  13. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  14. தாளிக்க
  15. தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி
  16. கடுகு -1 தேக்கரண்டி
  17. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  18. கருவேப்பிலை -2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றில் அரிசி பருப்புகளை பச்ச மிளகாய் மிளகாய் வத்தல்சேர்த்து இருபது நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்
  2. தண்ணீரை வடிகட்டி விட்டு மற்ற பொருட்களை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  3. கெட்டி தயிரில் அரைத்த விழுதை மஞ்சள் பொடி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பெரிய பாத்திரத்தில் விட்டு ஆற்றிக்கொள்ளவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்
  6. நன்றாக வதங்கியதும் கலந்து வைத்த தயிர் கலவையை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  7. அடிப்பிலிருந்து இறக்கியதும் உடனே மூடி போட்டு மூடாமல் சூடு ஆறியதும் மூடவும்.சாதத்துடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்