வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத சாக்லேட் கேக்

Photo of Eggless chocolate cake by T.n. Lalitha at BetterButter
447
3
0.0(0)
0

முட்டையில்லாத சாக்லேட் கேக்

Mar-13-2018
T.n. Lalitha
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முட்டையில்லாத சாக்லேட் கேக் செய்முறை பற்றி

முட்டையில்லாத சாக்லேட் கேக்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்டீமிங்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோகோ பொடி - 3 மேஜைக்கரண்டி
  2. மைதா - 1 1/4 கப்
  3. பேக்கிங் பொடி - 1 1/2 மேஜைக்கரண்டி
  4. கண்டன்ஸ்ட் பால் - 3/4 கப்
  5. வெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  6. வனிலா எஸன்ஸ் - 1 சொட்டு
  7. உப்பு - 1/2 மேஜைக்கரண்டி
  8. பொடித்த சர்க்கரை - 1 கப்
  9. உருக்கிய வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
  10. மைதா - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பத்திரத்தில் மைதா, பேகிங் பொடி, பொடித்த சக்கரை, கோகோ பொடி அனைத்தையும் சேர்த்து  சலித்து கொள்ளவும். பின் அதில் எண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும்
  2. பாலை அதனுடன் சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கிளறவும். மாவு கட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து கொள்ளவும்.
  3. கேக் செய்யும் பாத்திரத்தில் அதாவது கனமான அலுமினிய பாத்திரத்தில், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எல்லா இடங்களுக்கும் தடவவும். அதன் மேலே கொஞ்சமா மைதா மாவை தூவவும், இதனால் கேக் ஒட்டாமல் வரும்.
  4. கேக் கலவையை அந்த பாத்திரத்தில் ஊற்றவும். மேலே சிறிது பாதாமை சேர்க்கவும். எப்பொழுதும் கேக் பாத்திரத்தின் பாதி அளவு தான் ஊற்ற வேண்டும், அப்போது தான் கேக் எழும்பி வரும்.
  5. இப்போது குக்கரில் இந்த கேக் பாத்திரத்தையும் வைத்து மூடவும். விசில் போட கூடாது. குக்கர் மூடியில் உள்ள கேஸ்கட் வளையத்தைப் போட வேண்டாம்  30 நிமிடம் கழித்து குக்கரை அனைத்து விடவும்.10 நிமிடம் கழித்து எடுத்து, சூடாக பரிமாறவும்.
  6. கேகின் மேல் பழத்தை வைத்து அலங்காரம் செய்யலாம். வெண்ணெய் சர்க்கரையை மிக்சியில் அடித்து ஐசிங் செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்