வீடு / சமையல் குறிப்பு / பேய்கட் எல்பௌ சீஸி பாஸ்தா

Photo of Baked Elbow Cheesy Pasta by Jayanthy Asokan at BetterButter
153
4
0.0(0)
0

பேய்கட் எல்பௌ சீஸி பாஸ்தா

Mar-13-2018
Jayanthy Asokan
900 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பேய்கட் எல்பௌ சீஸி பாஸ்தா செய்முறை பற்றி

பாஸ்தாவை சிறிது எண்ணெய் ஊற்றி தண்ணீரில் வேக வைக்க வேண்டும்.பின் ஒரு கடாயில் மைதா மற்றும் வெண்ணெய் சேர்த்து வறுத்து பால் ஊற்றி கொதிக்க விட வேண்டும். மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தனியே வைக்க வேண்டும். இன்னும் ஒரு கடாயில் வெங்காயம், ப்ரோக்கலி மற்றும் ஆல் ஹெர்ப்ஸ் (ஆர்கனோ, பசில், தைம் )கலந்து ஒரு இரண்டு நிமிடம் வதக்க வேண்டும். இவ்வனைத்தும் பேக்கிங் ட்ராயில் ஒரு லேயர் மேல் லேயர் யாக பரத்தி சீஸ் தூவி தக்காளி கொண்டு அலங்கரித்து பேக் செய்தால் பேய்கட் எல்பௌ சீஸி பாஸ்தா தயார்.

செய்முறை டாக்ஸ்

 • முட்டை இல்லா
 • மீடியம்
 • மற்றவர்கள்
 • இத்தாலிய
 • பேக்கிங்
 • பாய்ளிங்
 • ஸாட்டிங்
 • மெயின் டிஷ்
 • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. எல்பௌ பாஸ்தா 3கப்
 2. சீஸ் பிளாக் 1(200கிராம் )
 3. ப்ரோக்கோலி 1 சிறியது
 4. குடைமிளகாய் 2
 5. வெங்காயம் 1
 6. மிக்சட் ஹெர்ப்ஸ் 2 மேஜைக்கரண்டி
 7. சில்லி பிளக்ஸ் 2 மேஜைக்கரண்டி
 8. தக்காளி சாஸ் 1/2 cup
 9. வெள்ளை சாஸ் செய்ய தேவையானவை
 10. பால் 1/2 லிட்டர்
 11. வெண்ணெய் 50 கிராம்
 12. மிளகு தூள் 2 மேஜைக்கரண்டி
 13. மைதா 2 மேஜைக்கரண்டி
 14. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

 1. பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து வேக வைக்கவேண்டும்.
 2. முக்கால் பதம் வெந்தவுடன் தண்ணீர் வடித்து குளிர்ந்த நீரில் கழுவி தனியே வைக்க வேண்டும்.
 3. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயம், ப்ரோக்கோலி,தக்காளி, குடமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதனுடன் வேக வைத்த பாசத்தவை கலந்து தனியே வைக்க வேண்டும்.
 4. வெள்ளை சாஸ் செய்ய.. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதனுடன் மைதா கலந்து வதக்க வேண்டும். நிறம் மாறும் முன் பால் சேர்த்து கொதிக்க விடவேண்டும். குறைந்த தணலில் இருக்க வேண்டும். ஹெர்ப்ஸ், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தனியே வைக்க வேண்டும்.
 5. ஓவெனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்ய வேண்டும்.
 6. ஓவென் ப்ரோப் கிளாஸ் ட்ராயில் முதலில் பாஸ்தா கலவை ஒரு லேயர் போடா வேண்டும்.
 7. அதன் மேல் வெள்ளை சாஸ் உற்ற வேண்டும்.
 8. அதன் மேல் துருவிய சீஸ் தூவ வேண்டும்.
 9. அதன் மேல் தக்காளி சாஸ் ஒரு லேயர் .
 10. பின் அதன் மேல் பாஸ்தா கலவை, வெள்ளை சாஸ், சீஸ் மற்றும் தக்காளி சாஸ் லேயர் செட் செய்ய வேண்டும்.
 11. இப்படி செட் செய்ய வேண்டும்.
 12. பின் அதன் மேல் குடமிளகாய் வைத்து அலங்கரிக்க வேண்டும். சீஸ் மற்றும் சில்லி பிளக்ஸ் தூவ வேண்டும்.
 13. ப்ரீஹீட்ட ஓவெனில் 15 நிமிடம் வைத்து பேக் செய்ய வேண்டும்.
 14. பேக் செய்த பின் மேலே தூவிய சீஸ் உருகி பாஸ்தா உடன் கலந்திருக்க வேண்டும்.
 15. சுடசுட பரிமாற வேண்டும். இதுவே பே க்ட் எளபௌ சீஸி பாஸ்தா வாகும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்