வீடு / சமையல் குறிப்பு / டிராகன் ஃப்ரூட் கஸ்டர்டு கிரீம்

Photo of Dragon fruit custard creamy by Adaikkammai Annamalai at BetterButter
279
6
0.0(0)
0

டிராகன் ஃப்ரூட் கஸ்டர்டு கிரீம்

Mar-13-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

டிராகன் ஃப்ரூட் கஸ்டர்டு கிரீம் செய்முறை பற்றி

இது சுவையான கிரீமி, டிராகன் பழம் உடலுக்கு மிக நல்லது, பழங்கள் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவர்கள்,, குளிரூட்டி குடுக்கலாம் பயப்படவேண்டாம்,, கொடுத்துவிட்டு சூடு தண்ணி ஒரு கப் கொடுத்தால் சளி போன்ற பேச்சுக்கே இடமில்லை,

செய்முறை டாக்ஸ்

 • முட்டை இல்லா
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • சில்லிங்
 • டெஸர்ட்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. பால் - 1 லிட்டர்
 2. கஸ்டர்டு பவுடர் - 4 ஸ்பூன்
 3. தேவையான பழங்கள் - தேவையானஅளவு
 4. டிராகன் ஃப்ரூட் - 1
 5. சர்க்கரை - 1 கப்

வழிமுறைகள்

 1. தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை எடுத்து கொள்ளவும்
 2. முதலில் பாலை நன்கு காய்ச்சவும், பின் அடி பிடிக்க விடாமல் சிம்மில் வைத்து நன்கு கிளறவும்.
 3. பின் 4 ஸ்பூன் கஸ்டர்டு பவுடர் எடுத்து அதில் ஆறிய பால் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
 4. பின் அதை காய்ச்சிய பாலுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும், கையை எடுக்காமல் கிளறவும், இல்லையென்றால் பிடித்து விடும்
 5. பின் 1 கப் சர்க்கரை சேர்த்து, நன்றாக கிளறவும்
 6. பின் நன்றாக கெட்டியாக வரும் வரை கிண்டவும் விஸ்க்கை வைத்து அடுப்பை சிமில் வைத்து அல்லது கரண்டியை வைத்து கெட்டியாக வரும் வரை இதே போல்
 7. பின் அடுப்பை அனைத்து விட்டு ,அதை அரை மணி நேரம் சூடு தணிய ஆற வைக்கவும்,, இப்பொழுது கஸ்டர்டு பேஸ் தயார்,
 8. அரை மணி நேரம் ஆன பின் நறுக்கி வைத்த பழங்களை சேர்க்கவும் ஒன்றன் பின் ஒன்றாக
 9. பின் டிராகன் ஃப்ரூட் பழத்தை கடைசியாக சேர்த்து மெதுவாக கிளறி ஒன்று சேர்க்கவும்
 10. இப்பொழுது சுவையான, சுலபமான, இயற்கை நிறத்தை கொண்ட டிராகன் ஃப்ரூட் கஸ்டர்டு கிரீமி தயார்,

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்