வீடு / சமையல் குறிப்பு / சத்து மாவு குலாப் ஜாமுன்

Photo of Health mix jamun by Rabia Hamnah at BetterButter
368
7
0.0(0)
0

சத்து மாவு குலாப் ஜாமுன்

Mar-15-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

சத்து மாவு குலாப் ஜாமுன் செய்முறை பற்றி

சத்தான உணவு. குழந்தைகள் விரும்புவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கோதுமை மாவு-1 கப்
  2. சத்து மாவு-1/2 கப்
  3. பால் மாவு-4டேபிள் ஸ்பூன்
  4. உப்பு-2 பின்ச்
  5. பேக்கிங் பவுடர்-1 ஸ்பூன்
  6. நெய்-2 ஸ்பூன்
  7. பால்-(மாவு சேரும் அளவு)
  8. அடக்கம் செய்ய-
  9. வேர்கடலை-2 டேபிள் ஸ்பூன் ,
  10. பாதாம்-10-15 ,
  11. பனைவெல்லம் -1 டேபிள் ஸ்பூன
  12. பாதாம், வேர்கடலை கொஞ்சம் பொடித்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து தனியாக வைக்கவும்.
  13. சர்க்கரை பாகு செய்ய
  14. சீனி-1 கப்
  15. தண்ணீர்-1 கப்
  16. ஏலக்காய் பொடி- 2 பின்ச்
  17. சீனியுடன் தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து 10 நிமிடத்தில் இறக்கவும்.

வழிமுறைகள்

  1. மாவு சேர்க்க கூறியவற்றில் பாலைத் தவிர மற்ற பொருட்களை சேர்த்து பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிருதுவாக பிசைந்து 1/2 மணி நேரம் வைக்கவும்.
  2. பின்பு குலாப் ஜாமுனிற்கு எடுப்பது போல் மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி உள்ளே அடக்கத்தை வைத்து மாவை மூடி விட்டு உருண்டையாக பிடிக்கவும்.
  3. இப்படி அனைத்தையும் பிடித்து வைத்து நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடூத்து சீனி பாகில் போடவும்.
  4. நன்றாக ஊறியதும் சுவைக்கவும்.
  5. சத்து மாவு கஞ்சி விரும்பாத குழந்தைகள் கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்