வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய ‌கோதுமை ரவை காய்கறி கேக்

Photo of Broken wheat rava veggies cake by pavumidha arif at BetterButter
446
5
0.0(0)
0

சிறுதானிய ‌கோதுமை ரவை காய்கறி கேக்

Mar-15-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய ‌கோதுமை ரவை காய்கறி கேக் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.சிறுதானியம் உடலுக்கு புத்துணர்வு பலம் கொடுக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உடைத்த கோதுமை ரவை 1 கப்
  2. தண்ணீர் 3 கப்
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. கேரட் 2
  6. உருளைக்கிழங்கு 1
  7. பட்டாணி பயறு 1/2 கப்
  8. பீன்ஸ் 4
  9. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  10. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  11. கரம் மசாலா 1 மற்றும் 1/2 டீஸ்பூன்
  12. உலர் தானிய தூள் 1 டீஸ்பூன்
  13. உப்பு தேவையான அளவு
  14. கடுகு 1/2 டீஸ்பூன்
  15. உளுந்து பருப்பு 1/2 டீஸ்பூன்
  16. கருவேப்பிலை சிறிது
  17. பாதாம் 2
  18. முந்திரி பருப்பு 3
  19. நெய் 3 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் கோதுமை ரவையை நன்றாக வறுத்து எடுக்கவும் ‌
  2. குக்கரில் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. இப்பொழுது அனைத்து காய்கறி மற்றும் தக்காளி சேர்த்து நன்கு நெய்யில் கிளறவும்.
  4. 5 நிமிடம் கழித்து தண்ணீர் சேர்க்கவும்.பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா , உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  5. இப்பொழுது சிறிது சிறிதாக கோதுமை ரவையை கிளறியபடி சேர்க்கவும்.3-4 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
  6. விசில் வந்ததும் சிறிது நெய் ஊற்றி உலர் தானிய பொடி சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விடவும்.
  7. பிறகு பாதாம் மற்றும் ‌முந்திரிபருப்பு சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்