Photo of Egg Manchurian by விருதை சமையல் at BetterButter
445
4
0.0(0)
0

Egg Manchurian

Mar-15-2018
விருதை சமையல்
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை- 4
  2. மிளகு பொடி - 2 தேக்கரண்டி 
  3. உப்பு - தேவையான அளவு
  4. சோளமாவு - 5 தேக்கரண்டி
  5. மைதா - 5 தேக்கரண்டி
  6. பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது)
  7. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி
  9. பூண்டு - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  10. தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
  11. சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி
  12. சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
  13. குடை மிளகாய் -1

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி 1 தேக்கரண்டி மிளகு பொடி மற்றும் உப்பு சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலக்கவும்.
  2. வேறு பாத்திரத்தில் எண்ணைய் தடவி அதில் முட்டை கலவையை ஊற்றி  வைக்கவும்.
  3. இட்லி குக்கரில் சிறிது தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை உள்ளே வைத்து 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
  4. முட்டை வெந்ததும் பாத்திரத்தில் இருந்து எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
  5. ஒரு பாத்திரத்தில் 5 தேக்கரண்டி மைதா, 5 தேக்கரண்டி சோளமாவு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும். 
  6.  வெட்டி வைத்த முட்டை துண்டுகளை  மாவு கலவையில் போட்டு கலந்து எண்ணையில் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  7.  தவாவில் 2 தேக்கரண்டி எண்ணைய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பொடியாக வெட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  9.  பின்பு நறுக்கிய குடை மிளகாய், தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் கலந்து நன்கு கிளறவும்.
  10. 1 தேக்கரண்டி சோள மாவுடன் சிறிது தண்ணீர் கலந்து நன்கு கரைத்து அதில் ஊற்றவும்.
  11. தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து வைத்திருந்த முட்டை துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் கழித்து இறக்கவும்.
  12. சுவையான முட்டை மஞ்சூரியன் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்