வீடு / சமையல் குறிப்பு / சேமியா காய்கறி கிச்சடி (சேமியா பிரியாணி)

Photo of Vegetable semiya kichadi by T.n. Lalitha at BetterButter
441
2
0.0(0)
0

சேமியா காய்கறி கிச்சடி (சேமியா பிரியாணி)

Mar-15-2018
T.n. Lalitha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேமியா காய்கறி கிச்சடி (சேமியா பிரியாணி) செய்முறை பற்றி

சேமியா காய்கறி கிச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேமியா - 2 கப்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. கேரட் - 1
  4. உருளைக்கிழங்கு - 1
  5. தக்காளி - 1
  6. பச்சை மிளகாய் - 2
  7. இஞ்சி - சிறிய துண்டு
  8. கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை - சிறிது
  9. பட்டை - 1
  10. பிரிஞ்சி இலை - 1
  11. நெய் - 2 மேஜைக்கரண்டி
  12. உப்பு - தேவையான அளவு
  13. ஏலக்காய் - 2
  14. முந்திரி - 6

வழிமுறைகள்

  1. வெங்காயம், இஞ்சி, கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி கொள்ளவும்
  2. சேமியாவை கடாயில் போட்டு 1 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  3. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி காய வைத்து பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்த பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்
  4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, மஞ்சள்த்தூள், உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. அனைத்தும் நன்றாக வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும்.
  7. அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை, நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  8. ஒரு வானலியில், ஒரு ஸ்பூன் நெய் விட்டு, முந்திரியை வறுக்கவும்.
  9. சேமியா கிச்சடியில் முந்திரியை கொட்டவும். சுவையான சேமியா காய்கறி கிச்சடி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்