தண்டை கேசர் பிஸ்தா பாதாம் குல்பி | Thandai Kesar Pista Badam Kulfi in Tamil

எழுதியவர் Chef (Mrs) Reetu Uday Kugaji  |  24th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Thandai Kesar Pista Badam Kulfi by Chef (Mrs) Reetu Uday Kugaji at BetterButter
தண்டை கேசர் பிஸ்தா பாதாம் குல்பிChef (Mrs) Reetu Uday Kugaji
 • ஆயத்த நேரம்

  15

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  மணிநேரம்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

864

0

Video for key ingredients

  தண்டை கேசர் பிஸ்தா பாதாம் குல்பி

  தண்டை கேசர் பிஸ்தா பாதாம் குல்பி தேவையான பொருட்கள் ( Ingredients to make Thandai Kesar Pista Badam Kulfi in Tamil )

  • பால், முழு கொழுப்புடையது - 03 லிட்டர்
  • கொய்யா, துருவியது ½ கப்
  • சர்க்கரை 1/4 கப்/ தேவையான அளவு.
  • பிஸ்தா பருப்புச் சாந்து - ½ தேக்கரண்டி
  • பாதாம் சாந்து - ½ தேக்கரண்டி
  • குங்குமப்பூ, பொரித்தது - 01 கிராம்.
  • தண்டை சாந்துக்காக:
  • பாதாம், வெளுக்கப்பட்டு, தோல் உரிக்கப்பட்டது - 1/4 கப்
  • முந்திரி பருப்பு - 1/4 கப்
  • பிஸ்தா பருப்பு - - ¼ கப்
  • கசகசா - 1 - ½ தேக்கரண்டி
  • பச்சை ஏலக்காய் தூள் - 1 - ½ தேக்கரண்டி
  • இலவங்கத்தூள் - - ½ தேக்கரண்டி
  • கரு மிளகு - 10 எண்ணிக்கை
  • தண்ணீர் - தேவையான அளவு
  • அலங்கரிக்க:
  • குங்குமப்பூ, பொரித்தது- ¼ தேக்கரண்டி.
  • பிஸ்தா பருப்பு - 5 கிராம்
  • பாதாம் - 15 கிராம்
  • ரோஜா இதழ்கள் - கொஞ்சம்
  • மற்றப் பொருள்கள்/தேவைகள்: மரக் கரண்டிக் குச்சிகள் - 10 எண்ணிக்கை

  தண்டை கேசர் பிஸ்தா பாதாம் குல்பி செய்வது எப்படி | How to make Thandai Kesar Pista Badam Kulfi in Tamil

  1. தயாரிப்பு நேரம் - 15 நிமிட சமையல் நேரம் - 1 - ½ ல் இருந்து 2 மணி நேர உறையவைக்கும் நேரம் - 16ல் இருந்து 18 மணி நேரம் பரிமாறுவது - 10 குல்பி அச்சுகள், நடுத்தர அளவிலானது.
  2. தண்டை சாந்துக்காக, பாதாமில் இருந்து தண்ணீர் வரைக் குறிப்பிடப்பட்டப் பொருள்கள் அனைத்தும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்து எடுத்து வைக்கவும்.
  3. ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில், பாலைக் கொதிக்கவைக்கவும். பால் கொதித்ததும், தீயை அடிக்கி, பால் பாதியாகக் குறையும்வரை சிம்மில் வைக்கவும்.
  4. அடிப்பிடிக்காமல் தீயாமல் இருக்கப் பாலைக் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  5. பாதியாகக் குறைந்ததும் சர்க்கரை முழுமையாகக் கரையும்வரை கலக்கவும். பிஸ்தா பருப்பையும், பாதாம் சாந்தையும் சேர்க்கவும். குங்குமப்பூவைச் சேர்க்கவும். சமமாகக் கலந்துவிடுவதற்கு வேகமாகக் கலக்கவும். தண்டைச் சாந்தைச் சேர்க்கவும்.
  6. திரும்பத் திரும்பக் கலவையை வேகமாகக் கலக்கவும். அடுப்பை நிறுத்துக. துருவிய கொய்யாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். குல்பிக் கலவையை முழுமையாக ஆறவிடவும்.
  7. குல்பி கலவையை குல்பி அச்சில் 3/4 பாகம் நிறையும்வரை ஊற்றி காற்றுப்புகாத வண்ணம் அவற்றை மூடி பிரிஜ்ஜில் வைக்கவும். 18ல் இருந்து 20 மணி நேரம் அல்லது அதிகமாக உறையவைப்பதற்காக உறையவைக்கவும்.
  8. குல்பி உறைந்ததும் குல்பி அச்சை ஓடும் நீரில் காட்டவும், எளிதாக வெளியில் எடுப்பதற்கு. குல்பியின் மையத்தில் ஒரு மரக்குச்சியைச் சொருகிவெளியில் இழுக்கவும்.
  9. வெள்ளி பூசப்பட்ட பிஸ்தா, பாதாம் பருப்புகளோடும், பொரித்த குங்குமப்பூவோடும் சில்லென்று பரிமாறவும். ரோஜா இதழ்களைக் கூட அலங்கரிப்பதற்காக நீங்கள் பயன்படுத்தலாம்.

  எனது டிப்:

  செஃப் குறிப்புகள்: 1. தீயாமல் இருக்கப் பாலைக் கிண்டிக்கொண்டே இருக்கவும். 2.பால் அடிப்பிடித்தால், பாலின் தீய்ந்த வாடையைச் சரிசெய்வது கடினமாகும். 3. பாலை சிம்மில் வைக்கும்போது காய்ச்சியைப் பாலைக்கூட நீங்கள் சேர்க்கலாம். 4. அதே குல்பிக் கலவையைப் பயன்படுத்தி மண் பாத்திரங்களைக்கொண்டு மட்கா குல்பியை நீங்கள் தயாரிக்கலாம். 5. குல்பியை வெளியில் எடுக்கும்போது தண்ணீர் வீணாவதைத் தடுக்கச் சூடான துண்டு பயன்படுத்தும் முறையை நீங்கள் பயன்படுத்தலாம். ேஹாலி கொண்டாடி, தண்ணீரைச் சேமியுங்கள்!!!

  Reviews for Thandai Kesar Pista Badam Kulfi in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.