உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Whey-Nuts Pancake

Photo of Whey-Nuts Pancake by Ayesha Ziana at BetterButter
0
5
5(1)
0

Whey-Nuts Pancake

Mar-18-2018
Ayesha Ziana
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Whey-Nuts Pancake செய்முறை பற்றி

வே என்று சொல்லப்படும் திரிந்த பாலின் நீர், நட்ஸ் பொடி, முட்டை, கோதுமை மாவு எல்லாம் சேர்த்து செய்த புரோட்டின் நிறைந்த பேன் கேக் ரெசிபி. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ருசியானதும் கூட.

செய்முறை டாக்ஸ்

 • తేలికైనవి
 • పిల్లలకు నచ్చే వంటలు
 • అమెరికన్
 • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
 • అల్పాహారం మరియు బ్రంచ్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. வே செய்ய: நாட்டு பசும்பால் 1 கப்
 2. எலுமிச்சை 1/4
 3. பேன் கேக் செய்ய: கோதுமை மாவு 1 கப்
 4. வே 1 கப்
 5. ஹோம்மேட் நட்ஸ் பொடி 2 டேபிள் ஸ்பூன்
 6. நாட்டு முட்டை 1
 7. தேன் 1 1/4 டேபிள் ஸ்பூன்
 8. பேக்கிங் சோடா/பேக்கிங் பவுடர் 1/2 ஸ்பூன்
 9. உப்பு ஒரு பின்ச்
 10. உப்பில்லாத வெண்ணெய் 1 ஸ்பூன்+ பேன் கேக் சுட

வழிமுறைகள்

 1. வே செய்ய: பாலைக் கொதிக்க விட்டு எலுமிச்சை சாறு ஊற்றவும். பால் திரியும். அதை வடிகட்டி தண்ணீர் மாதிரி இருக்கும் வே யை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
 2. ஹோம்மேட் நட்ஸ் பொடி செய்ய: பாதாம், நிலக்கடலை, பொரிகடலை, பிஸ்தா, முந்திரி இவற்றை சம அளவிலோ விருப்பமான அளவிலோ எடுத்து, ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து, பின்னர் சேர்த்து மிக்ஸியில் பொடித்து, பிரிட்ஜில் சேமித்துக் கொள்ளவும். இதை தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் வீதம் குழந்தைகளுக்குப் பாலில் கலக்கியோ, வேறு உணவுகளில் சேர்த்தோ கொடுத்து வரலாம்.
 3. பேன் கேக் செய்ய: ஒரு பவுலில் கோதுமை மாவு, பேக்கிங் சோடா/பவுடர், உப்பு, நட்ஸ் பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் வே, முட்டை, தேன், உருக்கிய வெண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து விஸ்க் செய்யவும். தோசை மாவு பதத்தில் மாவு கிடைக்கும்.
 4. அடுப்பில் ஒரு பேனை வைத்து, சிறிது வெண்ணெய் ஊற்றி பரப்பி, ஒரு கரண்டி நிறைய பேன் கேக் மாவை எடுத்து திக்காக ஊத்தப்பம் மாதிரி ஊற்றவும்.
 5. சிம்மில் அல்லது மீடியம் பிளேமில் வைத்து இரு புறமும் கோல்டன் ப்ரவுன் ஆகும் வரை சுட்டு எடுக்கவும்.
 6. பின்னர், பிளேட்டில் வைத்து தேன் அல்லது விருப்பமான ஹோம் மேட் ஜாம்/சாஸ் வைத்து பரிமாறவும்.
 7. சூப்பர் சுவையுடன் சத்தான வே நட்ஸ் பேன் கேக் தயார். இதைக் காலை உணவு/இடைநேர உணவு/மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Selvi Sasikumar
Mar-18-2018
Selvi Sasikumar   Mar-18-2018

Tasty & healthy sisy

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்