ஹெட்ஹாக் துண்டு | Hedgehog Slice in Tamil

எழுதியவர் Namita Tiwari  |  25th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Hedgehog Slice by Namita Tiwari at BetterButter
ஹெட்ஹாக் துண்டுNamita Tiwari
 • ஆயத்த நேரம்

  5

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  5

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

233

0

ஹெட்ஹாக் துண்டு recipe

ஹெட்ஹாக் துண்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Hedgehog Slice in Tamil )

 • 2 தேக்கரண்டி இனிப்பு சேர்க்கப்பட்டு தோல் உரிக்கப்பட்டது அல்லது 1 தேக்கரண்டி பொடியாக துருவப்பட்ட ஆரஞ்சின் தோல்
 • 1/3 கப் உலர் திராட்சை
 • 1/3 கப் வறுத்த வேர்கடலை
 • 150 கிராம் சாதாரண இனிப்பு பிஸ்கெட்டுகள்
 • 125 கிராம் அடர் சாக்லேட் அல்லது கொகோ சிப்சுகள்
 • 60 கிராம் வெண்ணெய்
 • ¾ கப் சுண்டக்காய்ச்சியப்ப பால் (வழக்கமான 240 மிலி பயன்படுத்தவும்)

ஹெட்ஹாக் துண்டு செய்வது எப்படி | How to make Hedgehog Slice in Tamil

 1. ஒரு 7x7 இன்ச் சதுர கேக் பாத்திரத்தை கிரி1ஸ் செய்து பார்ச்மெண்ட் பேப்பரால் ஒரு பக்கம் 5 செமீ அதிகமாக வைத்து லைன் செய்யவும்.
 2. பிஸ்கட்டை சிறுசிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்.
 3. சுண்டக் காய்ச்சியப் பாலையும் வெண்ணெயையும் ஒரு மொத்தமான அடிப்பாகமுள்ள கடாயில் கலந்து, குறைவான தீயில் வெண்ணெய் உருகும்வரை கலக்கவும்.
 4. சாக்லேட்டைச் சேர்த்து மென்மையாகும்வரை கலக்கவும். பிஸ்கெட், வேர்கடலை, உலர் திராட்சை, இனிப்பு சேர்த்தத் தோல் ஆகியவற்றைச் சேர்த்து கலந்துகொள்ளவும்.
 5. கலவையை கடாயில் ஊற்றி சமமாக பரவச் செய்யவும். மூடி போட்டு, பிரிஜ்ஜில் 4ல் இருந்து 5 மணி நேரம் அல்லது கெட்டியாகும்வரை வைக்கவும்.
 6. கடாயில் இருந்து எடுத்து துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.

எனது டிப்:

அதிக சவைக்காக, கசப்புச் சாக்லேட்டை எடுத்துக்கொள்ளவும். உங்களுக்குப் பிடித்த பருப்புகளைக் கூட நீங்கள் சேர்க்கலாம்.

Reviews for Hedgehog Slice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.