வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை பொட்டுகடலை பால்ஸ்

Photo of Peanut pottu kadalai balls by Krishnasamy Vidya Valli at BetterButter
573
3
0.0(0)
0

வேர்கடலை பொட்டுகடலை பால்ஸ்

Mar-18-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை பொட்டுகடலை பால்ஸ் செய்முறை பற்றி

வேர்கடலை எள்ளு பொரிகடலை மூன்றுமே குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது. உடல் வளர்ச்சிக்கும் நல்லது.அதை வைத்து செய்யும் எனர்ஜி பால்ஸ் இது. ஒரு நாளைக்கு காலை மாலை இரண்டு வேளையிலும் கொடுக்கலாம். ஒருவருக்கு இரண்டு வீதம் நான்கு நபர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஏர்ஃப்ரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை -1/4 கப்
  2. கருப்பு மற்றும் வெள்ளை எள் சேர்த்து -1/8 கப்
  3. பொரிகடலை -1/8 கப்+ 2 தேக்கரண்டி
  4. நாட்டுசர்க்கரை -1/4 கப்
  5. ஏலப்பொடி -2 சிட்டிகை
  6. நெய் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் எள்ளை வறுக்கவும்
  2. அதே கடாயில் வேர்கடலையையும் தனியாக வறுக்கவும்
  3. அதேகடாயில் பொரிகடலையை ஒரு பிரட்டு பிரட்டி தனியாக வைக்கவும்
  4. எல்லாவற்றையும் ஆறவைத்து நாட்டு சர்க்கரை ஏலப்பொடி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. அதன்மேல் ஒரு தேக்கரண்டி நெய்யை காய்ச்சி விடவும்
  6. அப்படியே சூட்டோடு உருண்டை பிடித்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்