வீடு / சமையல் குறிப்பு / பனானா பைட்ஸ்

Photo of Banana bites by Krishnasamy Vidya Valli at BetterButter
345
2
0.0(0)
0

பனானா பைட்ஸ்

Mar-19-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பனானா பைட்ஸ் செய்முறை பற்றி

ஹெல்தியான இனிப்பான ஸ்நாக்ஸ் இது. வாழைப்பழம் அதிகமாக எனர்ஜி கொடுக்கும். அதோடு வெல்லத்தில் அதிகமாக அயன் சத்து உள்ளது. ஒருவருக்கு மூன்று வீதம் ஆறுபேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு -1 கப்
  2. அரிசி மாவு -1/8 கப்
  3. வாழைப்பழம் -2 மீடியம் சைஸ்
  4. வெல்லம் -3/4 கப்(பழத்தின் இனிப்பிற்கு ஏற்ப அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
  5. ஏலப்பொடி- 1/4 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  7. முந்திரி கிஸ்மிஸ் - தலா 18 (விருப்பப்பட்டால் கூடுதல் சேர்க்கவும்)
  8. நெய் -ஒவ்வொரு மினி பைட்ஸிற்கும் 1 டிராப்ஸ்(விருப்பப்பட்டால்)

வழிமுறைகள்

  1. வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் கரைய விடவும்
  2. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  3. பழம் தோல் உரித்துக்கொள்ளவும்
  4. வெல்லம் நன்றாக கரைந்த பின் பழத்தை சேர்த்து மசித்துக்கொள்ளவும்
  5. கோதுமை மாவு அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சிறிது கரண்டியால் எடுத்து விடும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும். தோசை மாவைவிட சிறிது கெட்டியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
  6. ஏலப்பொடி சேர்த்து இருபது நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
  7. நான்ஸ்டிக் தோசைகல்லில் சிறு சிறுவட்டமாக கரண்டியால் விடவும் .
  8. அதன் மேலே தேங்காய் துருவல் முந்திரி கிஸ்மிஸ் தூவவும்
  9. விருப்பப்பட்டால் ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு டிராப் நெய் விடலாம்..
  10. திருப்பி போட்டு இரண்டு நிமிடங்கள் கழித்து எடுத்து பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்