வீடு / சமையல் குறிப்பு / நார்த்தங்காய் பச்சடி

Photo of Citron/Narthangai Pachadi by Revathy Murali at BetterButter
4554
4
4.0(0)
0

நார்த்தங்காய் பச்சடி

Mar-26-2016
Revathy Murali
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நார்த்தங்காய் நடுத்தர அளவிலானது - 4 எண்ணிக்கை (கொஞ்சம் தோலை உறித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
  2. வெல்லம் - 200 கிராம்
  3. புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு தண்ணீரில் ஊறவைத்தது (புளிக்கரைசல்)
  4. கல்லு உப்பு - 1 தேக்கரண்டி
  5. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  6. கடுகு - 1 தேக்கரண்டி
  7. பச்சை மிளகாய் - 3 நடுத்தர அளவிலானது (சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது)
  8. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயை எடுத்துக்கொள்க. எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு, பெருங்காயம், மிளகாய் சேர்த்துக்கொள்ளவும்.
  2. நார்த்தங்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். பொருள்களைக் கலக்கவும்.
  3. இடையிடையே தண்ணீரைத் தெளித்து, நார்த்தங்காய் மென்மையாகும்வரை வேகவைக்கவும்.
  4. புளிச்சாரைச் சேர்த்து 10 நிமிடங்களுக்கு பச்சை வாடை போகும்வரை வேகவைக்கவும்.
  5. வெல்லம் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் குழம்பு அரை திரைவ நிலை வரும்வரை சமைக்கவும்.
  6. பச்சடி ஆறியதும் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்