வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் வெல்ல அடை

Photo of Beetroot Jaggery Adai by Ayesha Ziana at BetterButter
244
3
0.0(0)
0

பீட்ரூட் வெல்ல அடை

Mar-19-2018
Ayesha Ziana
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் வெல்ல அடை செய்முறை பற்றி

பீட்ரூட் இரும்புச்சத்து, வைட்டமின்கள், போலேட், மாங்கனீஸ் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்தது. இந்தக் குறிப்பானது அரிசி மாவு, கோதுமை மாவு, பீட்ரூட், வெல்லம் எல்லாம் வைத்து செய்யும் ஆரோக்கியமான ருசியான அடை. குழந்தைகளுக்குச் சிற்றுண்டியாகக் கொடுக்க ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பீட்ரூட் 1
  2. பால் 1 கப்
  3. இடியாப்ப மாவு 1 1/2 கப்
  4. கோதுமை மாவு 1/2 கப்
  5. பொடித்த வெல்லம் 2 1/4 கப்
  6. ஹோம்மேட் நட்ஸ் பொடி 1 1/2 டேபிள் ஸ்பூன்
  7. ஏலக்காய் பொடி 1 ஸ்பூன் நிறைய
  8. தண்ணீர் தேவைக்கு
  9. நெய் கைகளில் தடவ

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டைத் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். அல்லது துருவிக் கொள்ளவும். பின்னர், இதைப் பாலில் சேர்த்து நன்றாக வெந்து பால் முழுவதும் வற்றும் வரை சிம்மில் வைத்து வேக விடவும்.
  2. ஹோம் மேட் நட்ஸ் பொடி செய்ய: பாதாம், நிலக்கடலை, முந்திரி, பிஸ்தா, பொரிகடலை எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து, பிரிட்ஜில் சேமித்துக் கொள்ளவும். இதை தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் வீதம் குழந்தைகளுக்குப் பாலில் கலக்கியோ, விருப்பமான உணவுகளில் சேர்த்தோ கொடுக்கலாம்.
  3. ஒரு பேனில் 2 மாவையும் தனித்தனியாக 5 நிமிடங்கள் அல்லது சற்று வாசனை வரும் வரை சிம்மில் வைத்து வறுக்கவும்.
  4. ஒரு பவுலில் வறுத்த 2 மாவு, ஹோம் மேட் நட்ஸ் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்து ஸ்பூனால் கலந்து கொள்ளவும்.
  5. மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை மூழ்கும் வரை கொதிக்க வைத்து, நன்றாகக் கரைந்த பின்னர் வடிகட்டி, மீண்டும் கொதிக்க விடவும்.
  6. கொதிக்கும் வெல்லத்துடன் மாவுக்கலவையைச் சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும். பின்னர் பீட்ரூட்டையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.
  7. கலவை சற்று ஆறியதும், கையில் நெய் தடவி, சிறிய பந்து அளவு மாவு எடுத்துச் சின்ன அடைகளாகக் கையில் வைத்து தட்டி, பின்னர் நெய் தடவிய இடியாப்பத் தட்டில் 3 அடைகளை வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். இது மாதிரி எல்லா மாவையும் அடைகளாகத் தட்டி அவித்து எடுக்கவும்.
  8. சூப்பர் சுவையில் சத்தான பீட்ரூட் வெல்ல அடை தயார். பீட்ரூட் பிடிக்காத குழந்தைகளுக்குக் கூட இது மிகவும் பிடிக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்