வீடு / சமையல் குறிப்பு / கம்பு சட்னி

Photo of PEARL MILLET by Kalai Rajesh at BetterButter
709
4
0.0(0)
0

கம்பு சட்னி

Mar-19-2018
Kalai Rajesh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கம்பு சட்னி செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் சாப்பிட உகந்தவை சிறுதானிய உணவுகள். அதில் கம்பு முதன்மை வகிக்கிறது. *உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது. *வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. பரிட்சை நேரங்களில் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் குழந்தைகளுக்கு குளிர்ச்சியான உணவு பொருட்களை கொடுப்பது மிக அவசியம்.. கம்பை பயன்படுத்தி கூழ் , அடை செய்வது வழக்கம்.. அந்த வகையில் சிறுதானியமான கம்பு பயன்படுத்தி சுவையான கம்பு சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்...

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கம்பு - 1 கப்
  2. உளுந்து - கால் கப்
  3. கடலை பருப்பு - கால் கப்
  4. பெரிய வெங்காயம் - 2
  5. உப்பு - தேவையான அளவு
  6. காய்ந்த மிளகாய் - 6 அ 8(காரத்தை பொறுத்து)
  7. கடுகு - 1 டீஸ்பு ன்
  8. கறிவேப்பிலை - சிறிதளவு
  9. எண்ணெய் - வதக்க தேவையான அளவு
  10. பெருங்காயம் - ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கம்பு சட்னி செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாயைப் போட்டு வதக்கவும்.
  2. பெரிய வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. பருப்புகள் அனைத்தும் பொன்னிறமாக வதங்கியதும், அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கம்பு ஆகியவற்றைப் போட்டு வதக்கி ஆற வைத்துக்கொள்ளவும்.
  4. வதக்கிய கலவை நன்கு ஆறியதும், அவற்றை மிக்ஸியில் போட்டு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  5. அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயத்தூள் போட்டு தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலக்கினால் சுவையான கம்பு சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்