வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பகோடா

Photo of Onion pakoda by Lavanya Dhanasekaran at BetterButter
396
21
4.0(0)
0

வெங்காய பகோடா

Mar-27-2016
Lavanya Dhanasekaran
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • மீடியம்
 • மற்றவர்கள்
 • தமிழ்நாடு
 • ஃபிரையிங்
 • ஸ்நேக்ஸ்
 • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. வெங்காயம் - 2 கப் நீளவாக்கில் நறுக்கப்பட்டது
 2. கடலைப்பருப்பு மாவு - 2 கப்
 3. அரிசி மாவு - 2 1/2 தேக்கரண்டி
 4. பச்சை மிளகாய் - 3 பொடியாக நறுக்கப்பட்டது
 5. இஞ்சி - 2 இன்ச் நன்றாக நறுக்கப்பட்டது
 6. கரிவேப்பிலை 2 கொத்து
 7. சூடான எண்ணெய் - 2தேக்கரண்டி
 8. பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
 9. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 10. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

 1. நீளவாக்கில் வெங்காயத்தை நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பெருஞ்சீரகம், கரிவேப்பிலை சேர்த்துக் கலக்கி, 10 நிமிடங்கள் கலவையை விட்டு வைக்கவும். வெங்காயத்திலிருந்து தண்ணீர் கசிந்து வெளியேறும்.
 2. இப்போது கடலை மாவு, அரிசி மாவு, 2 தேக்கரண்டி சூடான எண்ணெய், பெருங்காயம் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். தண்ணீர் சேர்த்தால் சொதசொதவென்று இருக்கும். மொறுமொறுப்பு கிடைக்காது. தேவைப்பட்டால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். கலந்த பிறகு, படத்தில் உள்ளதுபோல் இருக்கும்.
 3. ஒரு கடாயை சூடுபடுத்திக்கொள்ளவும். பகோடாவை பொறிப்பதற்கு தேவையான சூட்டில் எண்ணெய் இருக்கிறதா என்று அறிந்துகொள்ள, கொஞ்சம் மாவை எண்ணெயில் விடவும், மாவு உப்பி உடனே மேற்பரப்பிற்கு வந்தால், எண்ணெய் பகோடா பொறிப்பதற்கு தயார்.
 4. தீயை நடுத்தர அளவிற்குக் குறைத்து, செய்துவைத்த பகோடா மாவில் கொஞ்சம் எடுத்து கீழே படத்தில் காண்பித்ததுபோல் எண்ணெயில் விடவும். உருண்டை செய்யவேண்டாம் அல்லது எந்த அமைப்பையும் அதற்குத் தரவேண்டாம், இந்த பகோடா வடிவமற்று இருக்கவேண்டும்.
 5. பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும், இடையிடையே கிண்டிக்கொள்ளவும். எண்ணெயில் இருந்து எடுத்து அதிகப்படியான எண்ணெயை வடிக்கட்டிக்கொள்ளவும் ஒரு வடிக்கட்டியால் அல்லது பேப்பர் துண்டினால்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்