வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஜாம்

Photo of Beetroot jam by T.n. Lalitha at BetterButter
1046
4
0.0(0)
0

பீட்ரூட் ஜாம்

Mar-20-2018
T.n. Lalitha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஜாம் செய்முறை பற்றி

வீட்டில் செய்த பீட்ரூட் ஜாம்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • சிம்மெரிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பீட்ரூட் - 1 பெரியது
  2. வெல்லம் - 1/2 கப்
  3. நெய் - 2 தேக்கரண்டி
  4. லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பீட்ரூட் துண்டுகளை போட்டு குக்கரில் வைத்து 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  3. வெந்ததும் அதை மிக்ஸியில் போட்டு லெமன் ஜூஸ் சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு பீட்ரூடை வேக வைத்த தண்ணீர் ஊற்றி கரைய விடவும். கரைந்ததும் அரைத்த பீட்ரூட் கலவையை ஊற்றி, நெய் சேர்த்து தீயை மிதமாக வைத்து கிளறி விட்டு மூடி வைக்கவும்.
  5. 5 நிமிடம் கழித்து திறந்து மேலே ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கிளறி விடவும்.
  6. பிறகு 10 நிமிடம் கழித்து ஒட்டாமல் வந்ததும், நன்றாக கிளறி இறக்கவும். சுவையான பீட்ரூட் ஜாம் தயார். காற்று புகாத குடுவையில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்