வீடு / சமையல் குறிப்பு / சிறுபயறு குழிப்பணியாரம்

Photo of Greengram Kuzhippaniyaram by Ayesha Ziana at BetterButter
327
2
0.0(0)
0

சிறுபயறு குழிப்பணியாரம்

Mar-20-2018
Ayesha Ziana
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிறுபயறு குழிப்பணியாரம் செய்முறை பற்றி

சிறுபயறு(பாசிப்பயறு) புரோட்டின் நிறைந்தது. பச்சரிசி கார்போஹைட்ரேட் நிறைந்தது. இவற்றை வைத்து செய்த குழிப்பணியாரம் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. தேர்வு நேரத்தில் எண்ணெய் அதிகம் சேர்க்க விரும்பாதவர்கள் இதை இரும்புச்சட்டிக்குப் பதிலாக நான்ஸ்டிக் பேனிலும் செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறுபயறு 1 கப்
  2. பச்சரிசி 1/4 கப்
  3. பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கியது
  4. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. உளுந்து 1 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை தாளிக்க
  8. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. எண்ணெய் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. சிறுபயறு மற்றும் பச்சரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து, பின்னர் மிக்ஸியில் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து, பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையை அரைத்த மாவில் சேர்த்து கலந்து, குழிப்பணியாரக் கல்லில் ஊற்றிப் பொரித்து எடுக்கவும். எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் நான்ஸ்டிக் குழிப்பணியாரக் கல்லில் லேசாக எண்ணெய் சேர்த்து, பணியாரங்களைச் சுட்டு எடுக்கவும்.
  3. சூப்பரான சிறுபயறு குழிப்பணியாரம் தயார். இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்