கேழ்வரகு தோசை | Ragi (finger millet) dosa in Tamil

எழுதியவர் Lavanya Dhanasekaran  |  28th Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ragi (finger millet) dosa by Lavanya Dhanasekaran at BetterButter
கேழ்வரகு தோசைLavanya Dhanasekaran
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

258

0

Video for key ingredients

    கேழ்வரகு தோசை recipe

    கேழ்வரகு தோசை தேவையான பொருட்கள் ( Ingredients to make Ragi (finger millet) dosa in Tamil )

    • சீரகம் 1 தேக்கரண்டி
    • கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
    • பச்சை மிளகாய் 4ல் இருந்து 5, நன்றாக நறுக்கப்பட்டது
    • தேசை வார்க்க எண்ணெய்
    • வெங்காயம் 1, நன்றாக நறுக்கப்பட்டது
    • சுவைக்கேற்ற உப்பு
    • தயிர் 1/2 கப்
    • அரிசி மாவு 1/2 கப்
    • கேழ்வரகு மாவு 2 கப்

    கேழ்வரகு தோசை செய்வது எப்படி | How to make Ragi (finger millet) dosa in Tamil

    1. கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தயிர், உப்பு ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து மாவை தண்ணீர்பதத்திற்குத் தயாரிக்கக் கலந்துகொள்ளவும். 30 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
    2. வெங்காயம், சீரகம், கொத்துமல்லி இலைகள், பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும். பச்சை வாடையை நீங்கள் விரும்பாவிட்டால், வதக்கிச் சேர்த்துக்கொள்ளவும்.
    3. தோசையை வார்க்க, தோசைக் கல்லை சூடாக்கவும். ஒரு கரண்டி மாவு எடுத்து ரவா தோசை போல் ஊற்றவும். (இதுபோன்ற தோசைகளைப் பரவச் செய்வது கடினம், அதன் தண்ணீர் பதம் எளிதில் கிழித்துவிடும்). கொஞ்சம் எண்ணெய் தெளித்துக்கொள்ளவும்.
    4. சில நிமிடங்களுக்குச் சமைத்து அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப்போடவும். ஒரு சில நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தட்டிற்கு மாற்றி உடனடியாக பரிமாறவும்.
    5. இந்தச் சூடான தோசைகளை தேங்காய் சட்டினி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.

    எனது டிப்:

    தோசைகள் தவாவிலிருந்து நேரடியாக எடுத்து சுடச்சுட மொறுமொறுவெனச் சாப்பிடுவது சிறந்தது.

    Reviews for Ragi (finger millet) dosa in tamil (0)