வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு தோசை

Photo of Ragi (finger millet) dosa by Lavanya Dhanasekaran at BetterButter
5116
29
5.0(0)
0

கேழ்வரகு தோசை

Mar-28-2016
Lavanya Dhanasekaran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேழ்வரகு மாவு 2 கப்
  2. அரிசி மாவு 1/2 கப்
  3. தயிர் 1/2 கப்
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. வெங்காயம் 1, நன்றாக நறுக்கப்பட்டது
  6. தேசை வார்க்க எண்ணெய்
  7. பச்சை மிளகாய் 4ல் இருந்து 5, நன்றாக நறுக்கப்பட்டது
  8. கொத்துமல்லி பொடியாக நறுக்கப்பட்டது
  9. சீரகம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கேழ்வரகு மாவு, அரிசி மாவு, தயிர், உப்பு ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து மாவை தண்ணீர்பதத்திற்குத் தயாரிக்கக் கலந்துகொள்ளவும். 30 நிமிடங்களுக்கு எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம், சீரகம், கொத்துமல்லி இலைகள், பச்சை மிளகாய் ஆகியவற்றை மாவுடன் சேர்க்கவும். பச்சை வாடையை நீங்கள் விரும்பாவிட்டால், வதக்கிச் சேர்த்துக்கொள்ளவும்.
  3. தோசையை வார்க்க, தோசைக் கல்லை சூடாக்கவும். ஒரு கரண்டி மாவு எடுத்து ரவா தோசை போல் ஊற்றவும். (இதுபோன்ற தோசைகளைப் பரவச் செய்வது கடினம், அதன் தண்ணீர் பதம் எளிதில் கிழித்துவிடும்). கொஞ்சம் எண்ணெய் தெளித்துக்கொள்ளவும்.
  4. சில நிமிடங்களுக்குச் சமைத்து அடுத்தப் பக்கத்தைத் திருப்பிப்போடவும். ஒரு சில நிமிடங்கள் வேகவைத்து, ஒரு தட்டிற்கு மாற்றி உடனடியாக பரிமாறவும்.
  5. இந்தச் சூடான தோசைகளை தேங்காய் சட்டினி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்