வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய கேழ்வரகு நூடுல்ஸ்

Photo of Sprouted Finger Millet Noodles by Vahitha Hasan at BetterButter
640
4
0.0(0)
0

முளைகட்டிய கேழ்வரகு நூடுல்ஸ்

Mar-21-2018
Vahitha Hasan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய கேழ்வரகு நூடுல்ஸ் செய்முறை பற்றி

சத்தான, சுவையான, குழந்தைகளுக்கு விருப்பமான நூடுல்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் அரிசி மாவு
  2. 1/2 கப் முளைகட்டிய கேழ்வரகு பொடி
  3. 1 கப் வெங்காயம் நறுக்கியது
  4. 1 கப் கேரட் நறுக்கியது
  5. 1 கப் முட்டைக்கோசு நறுக்கியது
  6. 1/4 கப் குடைமிளகாய்
  7. 2 பச்சை மிளகாய்
  8. 2 தே.கரண்டி கறி மசாலா தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கேழ்வரகு மாவு, உப்பு எடுத்துக்கொள்ளவும்
  2. கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி, இடியாப்பத்திற்கு போல் மாவை பிசைந்து கொள்ளவும்.
  3. பிசைந்த மாவை முறுக்கு அச்சில் எடுத்துக்கொள்ளவும்
  4. அதை இடியாப்பம் போல பிழிந்து, ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்
  5. நன்றாக வெந்ததும், அதை குளிர்ந்த நீரில் போடவும்.
  6. அதை ஒரு இஞ்ச் நீளத்திற்கு உதிர்த்துக்கொள்ளவும்
  7. கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், கோசு, குடைமிளகாய், பச்சை மிளகாய் உப்பு போட்டு வதக்கவும்
  8. பின்பு கறி மசாலா தூள் சேர்த்து, வதக்கவும்
  9. உதிர்த்த நூடுல்ஸ் சேர்த்து கிளறி, 2 நிமிடம் மூடி வைக்கவும்.
  10. பின்பு பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்