வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி பக்வான்

Photo of Greenpeas Bakwaan by Ayesha Ziana at BetterButter
275
2
0.0(0)
0

பட்டாணி பக்வான்

Mar-21-2018
Ayesha Ziana
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி பக்வான் செய்முறை பற்றி

பச்சை பட்டாணி, புளி மற்றும் சில பொருட்களை வைத்து செய்த ருசியான வெங்காயம்-பூண்டு இல்லாத சூப். குழந்தைகளுக்கு மாலை நேரத்துக்காகக் கொடுக்க ஏற்ற புரோட்டின் நிறைந்த சூப்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சை பட்டாணி 1/2 கப்
  2. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  3. உருளைக்கிழங்கு சிறியது 1 பொடியாக நறுக்கியது
  4. பீன்ஸ் 2 பொடியாக நறுக்கியது
  5. துருவிய கேரட்/முட்டைகோஸ் 1 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. சாட் மசாலா தூள் 1/2 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தழை சிறிது
  10. தாளிக்க: எண்ணெய் சிறிது
  11. கடுகு 1/4 ஸ்பூன்
  12. காரம் குறைவான பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  13. இஞ்சி 1/2 ஸ்பூன் பொடியாக நறுக்கியது

வழிமுறைகள்

  1. பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  2. குக்கரில் பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேரட், உப்பு, மஞ்சள் தூள், புளிக்கரைசல் சேர்த்து 3 விசில் வேக வைக்கவும்.
  3. வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளித்து, பட்டாணிக் கலவையில் கொட்டவும்.
  4. பின்னர், சாட் மசாலா மற்றும் கொத்தமல்லி தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்