வீடு / சமையல் குறிப்பு / காஷ்மீரி சார்வாரி புலாவ்

Photo of Kashmiri Sarvari Pilaf by Ayesha Ziana at BetterButter
595
2
0.0(0)
0

காஷ்மீரி சார்வாரி புலாவ்

Mar-22-2018
Ayesha Ziana
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காஷ்மீரி சார்வாரி புலாவ் செய்முறை பற்றி

கறுப்பு முழு உளுந்து, கறுப்பு கொண்டைக்கடலை/பட்டாணி, பால் மற்றும் நறுமணப்பொருட்கள் வைத்து செய்யப்படும் காஷ்மீரில் பிரபலமான புலாவ் ரெசிபி. ஆரோக்கியத்தில் மட்டும் அல்லாமல் ருசியிலும் நிறைவான புலாவ். எனவே குழந்தைகள் கண்டிப்பாக விரும்பிச் சாப்பிடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஜம்மு காஷ்மீர்
  • சிம்மெரிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி 1 1/4 கப்
  2. கறுப்பு முழுஉளுந்து 1/3 கப்
  3. கறுப்பு கொண்டைக்கடலை/பட்டாணி 1/3 கப்
  4. காய்ச்சிய பசும்பால் 2 கப்
  5. ஏலக்காய் 3
  6. கிராம்பு 3
  7. பச்சை மிளகாய் 2 அல்லது தேவைக்கேற்ப
  8. சீரகம்/ஷாஹி ஜீரா 2 ஸ்பூன்
  9. குங்குமப்பூ சிறிதளவு
  10. உப்பு தேவைக்கு
  11. நெய் 2 டேபிள் ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கறுப்பு உளுந்து மற்றும் கொண்டைக்கடலையை 3 மணி நேரம் ஊற வைத்து பின்னர் குக்கரில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வேக வைக்கவும்.(வேக வைத்த தண்ணீர் மீதம் இருந்தால் புலாவில் சேர்க்க வேண்டாம், புலாவ் கலர் மாறி விடும். சப்பாத்தி மாவு அல்லது வேறு எதிலாவது சேர்த்து சாப்பிடலாம்)
  2. பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. கடாயில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, சீரகம், கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பாலை ஊற்றவும்.
  4. பின்னர் உப்பு சேர்த்து லேசாக கொதிக்கத் தொடங்கியதும், அரிசியைச் சேர்க்கவும். மூடி வைத்து சிம்மில் வேக விடவும்.
  5. பால் முழுவதும் வற்றியதும், தோசைக்கல்லில் கடாயை வைத்து தம் போடவும்.
  6. 15 நிமிடங்கள் கழிந்து மூடியைத் திறந்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும், வேக வைத்த உளுந்து-கடலையைக் கொட்டி நன்றாகக் கலந்து, மீண்டும் தம் போடவும்.
  7. 10 நிமிடங்கள் கழிந்ததும் மூடியை மீண்டும் திறந்து, குங்குமப்பூ தூவி, மீதமுள்ள நெய்யை சேர்த்து, மீண்டும் தம் போடவும்.
  8. 5 நிமிடங்கள் கழிந்ததும் புலாவ் ரெடியானதும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
  9. சூப்பர் சுவையில் காஷ்மீரி சார்வாரி புலாவ் தயார். இதனுடன் காஷ்மீரி கிரேவி வகைகள், அல்லது விருப்பமான சைட் டிஷ் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்