அடைத்த கத்தரிக்காய் | Bharwa Baingan in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  31st Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Bharwa Baingan by Anjana Chaturvedi at BetterButter
அடைத்த கத்தரிக்காய்Anjana Chaturvedi
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

4685

0

அடைத்த கத்தரிக்காய் recipe

அடைத்த கத்தரிக்காய் தேவையான பொருட்கள் ( Ingredients to make Bharwa Baingan in Tamil )

 • 15 பிஞ்சு கத்தரிக்காய்
 • 1/2 கப் புதிய கொத்தமல்லி
 • 2 தேக்கரண்டி உலர்ந்த மாங்காய் தூள்
 • 2 தேக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள்
 • 3.5 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்/ தனியா தூள்
 • 1 தேக்கரண்டி உப்பு
 • 1.5 தேக்கரண்டி பெருஞ்சிரகம்/ சோம்பு
 • 5.5 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
 • 1/4 டீக்கரண்டி பெருங்காயம்
 • 1/2 டீக்கரண்டி சீரகம்

அடைத்த கத்தரிக்காய் செய்வது எப்படி | How to make Bharwa Baingan in Tamil

 1. கத்தரிக்காய்யை கழுவி துணியால் துடைத்துக் கொள்ளவும். கூர்மையான கத்தியைக் கொண்டு 2 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடினமான மற்றும் பரந்த கடாயில் எண்ணெய்யை ஊற்றி புகைவரும் அளவிற்கு சூடுசெய்து பின்பு அதனை ஆறவைத்து கொள்ளவும்.
 2. ஒரு கிண்ணத்தில் மாங்காய் தூள், உப்பு, மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், சிகப்பு மிளகாய் தூள், நொறுக்கப்பட்ட பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
 3. சூடாண எண்ணெயில் சீரகம் சேர்க்கவும், அது வெடித்து வரும்போது, ஒரு சிற்றிகை மஞ்சள் தூள். 1/4 டீக்கரண்டி உப்பு சேர்த்து கிளறிக் கொள்ளவும். பிறகு கடாயில் மசாலா சேர்த்த கத்திரிக்காயை போடவும் (சூடு செய்த கடுகு எண்ணெய் இருந்த பாத்திரத்தில்)
 4. 2 தேக்கரண்டி மீதமுள்ள மசாலாவை கத்தரிக்காயின் மேல் தூவிக் கொள்ளவும். கடாயை நன்கு மூடி குறைந்த வெப்பத்தில் வேகவிடவும். மெதுவாக கிளறிவிடவும், பிறகு கத்தரிக்காய்யை 2-3 முறை திருப்பிவிட்டு முழுமையாக வேகவிடவும். இதை ரொட்டி, பூரி அல்லது பருப்பு சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

எனது டிப்:

மசாலா நீண்ட நேரத்திற்கு நன்றாக இருக்க பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு சேர்த்துக் கொள்ளவும். இது சாதாரண வெப்பத்தில் 3 நாள்களுக்கு வைத்துக் கொள்ளலாம்( பயணத்துக்கு உகந்த உணவு )

Reviews for Bharwa Baingan in tamil (0)