உளுந்து முறுமுறுப்பான கச்சோரி | Urad dal ki khasta kachori in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  31st Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Urad dal ki khasta kachori recipe in Tamil,உளுந்து முறுமுறுப்பான கச்சோரி, Anjana Chaturvedi
உளுந்து முறுமுறுப்பான கச்சோரிAnjana Chaturvedi
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  15

  மக்கள்

4316

0

உளுந்து முறுமுறுப்பான கச்சோரி recipe

உளுந்து முறுமுறுப்பான கச்சோரி தேவையான பொருட்கள் ( Ingredients to make Urad dal ki khasta kachori in Tamil )

 • ரீபைண்டு மாவு/மைதா - 250 கிராம்
 • ரவை - 2 தேக்கரண்டி
 • உப்பு - 1 தேக்கரண்டி
 • சமையல் எண்ணெய் - 50 மிலி
 • பூரணத்திற்கு: உளுந்து (வெள்ளை) - 1/2 கப்
 • பெருஞ்சீரகம் நசுக்கியது - 2 தேக்கரண்டி
 • மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
 • பச்சை மிளகாய் - 2
 • இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
 • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
 • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
 • சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி

உளுந்து முறுமுறுப்பான கச்சோரி செய்வது எப்படி | How to make Urad dal ki khasta kachori in Tamil

 1. ரீபைண்டு மாவையும் ரவையையும் ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்க. உப்பு ரீபைண்டு எண்ணெய் சேர்க்கவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் கலந்துகொள்க. மென்மையான மாவைத் தயாரிக்கப் போதுமான தண்ணீரை ஊற்றி எடுத்து வைக்கவும். உளுந்தைக் கழுவி 4 மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின்னர் வடிக்கட்டி நன்றாகக் கழுவிக்கவும்.
 2. உளுந்து, பெருஞ்சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியை கரடுமுரடாக ஒரு மிக்சியில் அரைத்துக்கொள்க. இந்தக் கலவையை ஒரு கிண்ணத்தில் போட்டு சிவப்பு மிளகாய்த் தூள், மல்லித்தூள், பெருங்காயம், 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 3. சமையல் சோடா மாவை இந்தக் கலவையோடு கச்சோரி செய்வதற்கு முன் சேர்க்கவும். ஒரு சிறிய வாதுமை அளவு உருண்டையை மாவில் எடுத்து, தட்டி, 1 தேக்கரண்டி கலவையை அதில் வைத்து முனைகளை மடித்து ஒரு மொத்தமான கச்சோரியாக உருட்டிக்கொள்ளவும்.
 4. ஒரு வானலியைச் சூடுபடுத்திக்கொள்க. அதன்பின்னர் கச்சோரியை எண்ணெயில் விட்டு மிதமானச் சூட்டில் திருப்பிப்போடுக. அவ்வப்போது கச்சோரிகளைத் திருப்பிப்போடவும், அப்போதுதான் இரண்டு பக்கமும் நன்றாக வேகும்.
 5. இரண்டு பக்கமும் பொன்னிறமாக, முறுமுறுப்பாக மாறும் வரையிலும் கச்சோரி முழுமையாக உப்பும் வரையும் வறுக்கவும்.

Reviews for Urad dal ki khasta kachori in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.