வெந்தயம் சோள மலாய் (வெந்தயம் மற்றும் சோள குழம்பு) | Methi Corn Malai (Fenugreek and Corn Curry) in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  31st Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Methi Corn Malai (Fenugreek and Corn Curry) by Anjana Chaturvedi at BetterButter
வெந்தயம் சோள மலாய் (வெந்தயம் மற்றும் சோள குழம்பு)Anjana Chaturvedi
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

3519

0

வெந்தயம் சோள மலாய் (வெந்தயம் மற்றும் சோள குழம்பு) recipe

வெந்தயம் சோள மலாய் (வெந்தயம் மற்றும் சோள குழம்பு) தேவையான பொருட்கள் ( Ingredients to make Methi Corn Malai (Fenugreek and Corn Curry) in Tamil )

 • 2 கப்/ 80 கிராம் புதிய வெந்தயம்/ ஹரி மேதி
 • 1.5 கப் சோளம் / சோளம் சிறுமணி
 • 4 சிறிய தக்காளி ( 350 கிராம்)
 • 15 முந்திரி பருப்பு/ காஜு
 • 1 கப் முழு கொழுப்பு பால்/ பால்
 • 2 தேக்கரண்டி கீரிம்
 • 1/4 டீக்கரண்டி ஏலக்காய்த் தூள்/ எலைச்சி தூள்
 • 1/3 டீக்கரண்டி மஞ்சள்தூள் / ஹல்டித் தூள்
 • 3/4 டீக்கரண்டி சிகப்பு மிளகாய்த்தூள் / லால் மிர்ச் தூள்
 • 1.5 டீக்கரண்டி சர்க்கரை / சீனி
 • 1/2 டீக்கரண்டி கரம் மசாலா தூள்
 • 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய்
 • 2 தேக்கரண்டி வெண்ணெய்

வெந்தயம் சோள மலாய் (வெந்தயம் மற்றும் சோள குழம்பு) செய்வது எப்படி | How to make Methi Corn Malai (Fenugreek and Corn Curry) in Tamil

 1. வெந்தய இலையை கழுவி வெட்டிக்கொள்ளவும். உப்பு சேர்த்து 10 நிமிடம் தனியே மூடி வைத்துக் கொள்ளவும். புதிய தண்ணீரில் மிண்டும் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
 2. சோள முத்துக்களை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து 3 விசில்விடவும், தண்ணீரை வடிக்கட்டி தனியே வைத்துக்கொள்ளவும். முந்திரி வெட்டி அதனை 3 தேக்கரண்டி பாலில் 15 நிமிடம் ஊறவைக்கவும் பின் அதை பசைப்போன்று அரைத்துக் கொள்ளவும்.
 3. பிரஷ் குக்கரில் தக்காளியை வேகவைத்து கூழ் போன்று செய்துக் கொள்ளவும். எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கடாயில் சூடு செய்துக் கொள்ளவும். அதில் சீரகம் சேர்க்கவும், அது வெடிக்க தொடங்கியதும் ஏலக்காய்த் தூள் சேர்க்கவும்.
 4. இப்போது நறுக்கிய வெந்தய இலையை/ மேதியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி கூழ், உப்பு, மிளகாய் தூள் , மஞ்சள் தூள் சேர்க்கவும். இது எண்ணெய் விட்டு வரும் வரை இதை கொதிக்கவிடவும்.
 5. பின்னர் அரைத்த முந்திரியை சேர்த்துக்கொள்ளவும், வேகவைத்த சோள முத்துக்களை மேலும் ஒரு நிமிடம் வேகவைக்கவும். 2-3 நிமிடங்களுக்கு இலேசாக கொதிக்கும் வரை வேகவிடவும் பின் கீரிம் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். கடாயை மூடி குறைந்த வெப்பத்தில் சில நிமிடங்கள் வேகவிடவும்.
 6. இதை சூடான நாண், ரொட்டி அல்லது புரோட்டவுடன் பரிமாறவும்.

எனது டிப்:

புதிய வெந்தயம் கிடைக்கவில்லை எனில் 4 தேக்கரண்டி கசூரி மேதியை பயன்படுத்தலாம். இதை 10 நிமிடம் ஊறவைக்கவும். அந்த தண்ணீரை நீக்கி விட்டு மீண்டும் ஒருமுறை கழுவி பயன்படுத்தவும்.

Reviews for Methi Corn Malai (Fenugreek and Corn Curry) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.