Photo of Neer mor by Krishnasamy Vidya Valli at BetterButter
361
2
0.0(0)
0

நீர் மோர்

Mar-25-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

நீர் மோர் செய்முறை பற்றி

ஸ்ரீராமநவமியின் நெய்வேத்யங்களில் ஒன்று இந்த நீர் மோர். அந்த காலத்தில் முன்னோர்கள் அந்தந்த சீதோஷணநிலைக்கு ஏற்ப அந்தந்த பண்டிகைகளின் உணவுகளை குறிப்பிட்டு இருந்தார்கள். அவற்றில் முக்கியமாக இந்த பங்குனி மாதத்தில் வரும் ஸ்ரீராமநவமியன்று செய்யப்படும் நெய்வேத்யங்களில் ஒன்று இந்த நீர்மோர். கோடைகாலத்திற்கு ஏற்றது. குழந்தைகளுக்கு கூலான உணவுகளை கொடுப்பதற்கு பதில் இயற்கையிலேயே குளுமையான இந்த நீர் மோர் கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கெட்டி தயிர் -1/2 கப்
  2. தண்ணீர் -2 கப்
  3. உப்பு -1/2 தேக்கரண்டி
  4. பச்ச மிளகாய் -1
  5. இஞ்சி -1 சிறிய துண்டு
  6. பெருங்காயம் -1/8 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  8. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. தயிரை தண்ணீர் விட்டு நன்றாக கடைந்து கொள்ளவும்
  2. கருவேப்பிலை பச்ச மிளகாய் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. இஞ்சியை தட்டிக்கொள்ளவும்
  4. எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக பெரிய பாத்திரத்தில் விட்டு ஆற்றி பின்னர் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்