வீடு / சமையல் குறிப்பு / தோசை உசிலி ரோல்ஸ்

Photo of Dosai Usili Rolls by Ayesha Ziana at BetterButter
313
3
0.0(0)
0

தோசை உசிலி ரோல்ஸ்

Mar-25-2018
Ayesha Ziana
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தோசை உசிலி ரோல்ஸ் செய்முறை பற்றி

உசிலி மற்றும் மேலும் சில டாப்பிங் வைத்து செய்த தோசை ரோல்ஸ். குழந்தைகளுக்கு மாலை ஸ்நாக்சாகவோ காலை உணவாகவோ பரிமாற ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு - 3 தோசைக்கான அளவு
  2. உசிலி செய்ய: கடலைப்பருப்பு 1/4 கப்
  3. காய்ந்த மிளகாய் 2 சிறிய சைஸ்
  4. கறிவேப்பிலை 1/2 கொத்து
  5. பெருங்காயம் 1 சிட்டிகை
  6. உப்பு தேவைக்கு
  7. டாப்பிங் கு: தக்காளி 1 பொடியாக நறுக்கியது
  8. கேரட் 1 துருவியது
  9. கறிவேப்பிலை/கொத்தமல்லித்தழை தேவைக்கு
  10. ஓமப்பொடி(தேவைப்பட்டால்) தேவைக்கு
  11. செட்டார் சீஸ் அல்லது விரும்பிய சீஸ்(தேவைப்பட்டால்) தேவைக்கு

வழிமுறைகள்

  1. உசிலி செய்ய: கடலைப்பருப்பை 1 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, மிக்ஸியில் மற்ற பொருட்கள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். இதை நல்லெண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் அவித்து எடுக்கவும். சற்று ஆறிய பின்னர் உதிர்த்துக் கொள்ளவும். உசிலி தயார்.
  2. இரும்புச்சட்டியில் தோசைகளைச் சற்று கனமாக ஊற்றி 2 பக்கமும் சுட்டு எடுக்கவும்.
  3. ஒரு பிளேட்டில் தோசை வைத்து, மேலே உசிலி தூவி, அதன் மேலே தக்காளி, கேரட், கறிவேப்பிலை/கொத்தமல்லி, ஓமப்பொடி, செட்டார் சீஸ் என ஒவ்வொன்றாக டாப்பிங் செய்யவும். இறுதியில் மடித்துப் பரிமாறவும்.
  4. சூப்பர் சுவையுடன் ஆரோக்கியமான தோசை உசிலி ரோல்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்