வீடு / சமையல் குறிப்பு / கம்பு கொழுக்கட்டை ஸ்வீட் ப்யூசன்

Photo of pearl millet sweet by Bhavani Murugan at BetterButter
452
4
0.0(0)
0

கம்பு கொழுக்கட்டை ஸ்வீட் ப்யூசன்

Mar-26-2018
Bhavani Murugan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கம்பு கொழுக்கட்டை ஸ்வீட் ப்யூசன் செய்முறை பற்றி

சில குழந்தைகளுக்கு கொழுக்கட்டை விட ஸ்வீட் தான் பிடிக்கும். அவர்களுக்காக கொழுக்கட்டை ஸ்வீட் ப்யூசன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கம்பு தானியம் - 150 கிராம்
  2. பாசிப் பருப்பு - 75 கிராம்
  3. தேங்காய் துறுவல் - 1/2 மூடி
  4. வெல்லம் - 125 கிராம்
  5. ஏலக்காய் - 4
  6. அலங்கரிக்க :
  7. சர்க்கரை - 1 ஸ்பூன் (பொடித்தது)
  8. ஜாம்-1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கம்பு தானியத்தை தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு நண்கு அலசி துணியில் காய வைக்கவும்
  3. பிறகு காய்ந்ததும் வானலியில் சிவக்க வருத்து எடுத்துக்கொள்ளவும்
  4. பிறகு பாசிப் பருப்பை சிவக்க வருத்து எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு ஆற விடவும்
  6. பிறகு கம்பு, பாசிப் பருப்பு, ஏலக்காய், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  7. பிறகு அதனுடன் துருவிய வெல்லம் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி அதை (டைமண்ட்) வடிவில் வைத்து கொள்ளவும்
  8. பிறகு இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக விடவும்
  9. பிறகு எடுத்து ஆற விடவும்
  10. பிறகு அதன் மேல் சர்க்கரை தூவி ஜாம் வைத்து பரிமாரவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்