அவல் களி | Poha kali in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  26th Mar 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Poha kali by Krishnasamy Vidya Valli at BetterButter
அவல் களிKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    1

    மக்கள்

1

0

அவல் களி recipe

அவல் களி தேவையான பொருட்கள் ( Ingredients to make Poha kali in Tamil )

  • அவல் -1/4 கப்
  • வெல்லம் -1/8 கப் (பொடியாக தட்டிக்கொள்ளவும்)
  • தேங்காய் பல் கீறியது -1 மேஜைக்கரண்டி
  • எள்ளு -1 தேக்கரண்டி
  • பாசிப்பருப்பு -1 தேக்கரண்டி
  • நெய் -1/2 தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • ஏலப்பொடி -2 சிட்டிகை

அவல் களி செய்வது எப்படி | How to make Poha kali in Tamil

  1. வெறும் கடாயில் பாசிப்பருப்பை வறுக்கவும்
  2. தனியாக எடுத்து விட்டு எள்ளை வறுக்கவும்
  3. வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  4. விருப்பப்பட்டால் வடிகட்டிக்கொள்ளவும்
  5. அவலை தண்ணீர் விட்டு களைந்து வைக்கவும். கெட்டி அவல் என்றால் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அவல் குழைய கூடாது . களி செய்தபின் கடிக்கும் பதத்தில் இருக்க வேண்டும்.
  6. வெல்லகரைசலில் அவலை சேர்த்து கிளறவும்
  7. வறுத்த எள்ளு பாசிப்பருப்பு மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்
  8. தேங்காய் பல்கீறியதை சேர்த்து நன்றாக கிளறவும்
  9. நெய்( விருப்பப்பட்டால்) சேர்த்து இறக்கவும்

எனது டிப்:

இதை உருண்டையாகவும் செய்து கொடுக்கலாம். விருப்பப்பட்டால் குழைவாகவும் செய்யலாம்

Reviews for Poha kali in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.