வீடு / சமையல் குறிப்பு / வேர்க்கடலை பர்பி

Photo of Groundnut barbi by kamala shankari at BetterButter
481
3
0.0(0)
0

வேர்க்கடலை பர்பி

Mar-26-2018
kamala shankari
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேர்க்கடலை பர்பி செய்முறை பற்றி

சத்தான சுவையான ஸ்வீட் ரெடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேர்க்கடலை 1/2 கப்
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. சர்க்கரை 1 கப்
  4. முந்திரி பருப்பு 1/4 கப்
  5. நெய் 1/2 கப்
  6. ஏலக்காய் சிறிது
  7. சுக்கு பொடி சிறிது

வழிமுறைகள்

  1. பச்சை வேர்க்கடலை வெறும் வாணலியில் வறுத்து தோலை உரித்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. தேங்காய் துருவல் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  4. முந்திரி பருப்பு சிறிது நெய் விட்டு வறுத்து கொள்ளவும்
  5. சர்க்கரை சிறிது நீர்விட்டு பாகு காய்ச்சி கொள்ளவும்
  6. கம்பி பதம் வந்ததும் வேர்க்கடலை பொடி தேங்காய் துருவல் முந்திரி பருப்பு போட்டு கிளறவும்
  7. ஒன்று சேர்ந்து பதமாக வரும் போது நெய் சேர்த்து கிளறவும்
  8. சுருண்டு வரும் போது ஏலக்காய் தூள் சுக்கு பொடி சேர்த்து கலக்கவும்
  9. நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் வில்லைகள் போட்டு பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்