கந்தவி | Khandvi in Tamil

எழுதியவர் Disha Khurana  |  3rd Apr 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Khandvi by Disha Khurana at BetterButter
கந்தவிDisha Khurana
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2422

0

கந்தவி recipe

கந்தவி தேவையான பொருட்கள் ( Ingredients to make Khandvi in Tamil )

 • 1 டீக்கரண்டி வெள்ளை எள் (அலங்காரத்திற்காக)
 • வெட்டப்பட்ட கொத்தமல்லி (அலங்காரத்திற்ககாக)
 • கடுகு(ராய்)- 1 டீக்கரண்டி
 • பெருங்காயம்- சிறிது அதிகமாக
 • அதிகமான கொழுப்புடைய எண்ணெய் 2-2.5 தேக்கரண்டி
 • காஷ்மீர் மிளகாய்த்தூள் - 1 டீக்கரண்டி
 • கருவேப்பிலை- 6-7
 • சுவைக்கேற்ப உப்பு
 • மஞ்சள்தூள் - 1 டீக்கரண்டி
 • எலுமிச்சைச் சாறு - 1
 • பச்சைமிளகாய் (நடுத்தர அளவு)- 2
 • இஞ்சி - 1/2 அங்குலம்
 • 3-5 கப் தண்ணீர்
 • 1 கப் தயிர்
 • 1 1/4 கப் கடலை மாவு

கந்தவி செய்வது எப்படி | How to make Khandvi in Tamil

 1. சமையலறை மேசையின் மீது அல்லது 2 பெரிய தட்டுகளின் பின்புறத்தின் மீது போதுமான அளவு எண்ணெயைத் தேய்க்கவும். ஆரம்பிப்பதற்கு முன்பு, தோசை கரண்டியை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 2. கடலை மாவை சலித்து அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
 3. இஞ்சி மற்றும் பச்சைமிளகாயில் குறைவான தண்ணீர் சேர்த்து பசைப்போன்று அரைத்துக் கொள்ளவும்.
 4. தயிரில் தண்ணீர் சேர்த்து கடைந்ந்து மோர் பதத்திற்கு செய்துக்கொள்ளவும். அதில் இஞ்சி பச்சைமிளகாய் விழுது மற்றும் எலுமிச்சை சாறு செய்துக் கொள்ளவும்.
 5. கடலை மாவு மற்றும் மோரை கட்டிகள் இல்லாமல் ஒருசேர கலந்துக்கொள்ளவும்.
 6. நான்ஸ்டிக் கடாயில் 1 டீக்கரண்டி எண்ணெய் சூடுசெய்துக் கொள்ளவும் அதில் கடலை மாவை கரைசல் ஊற்றவும். மாவு கடாயில் ஒட்டாதவாறு ஓரங்களில் மாவை தோசைக்கரண்டியைக் கொண்டு எடுத்துவிடவும்.
 7. கலவை கட்டியாகதவாறு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இது அடர்த்தியாகவும் மற்றும் பரவக்கூடிய வரை இந்த கலவையை கிளறிக்கொண்டே இருக்கவும்.
 8. கலவை தயார் என்பதை உறுதி செய்துக் கொள்ள, தட்டு ஒன்றில் வெண்ணெய் தடவி அதை ஆறவிடவும். இபபோது கஹந்தவி தட்டில் வைத்து சுழற்றுவது போதுமானது ஆனால் அது உங்கள் விரல்களில் ஒட்டிக்கொண்டால், அதை இன்னும் சிறிது நேரம்வேகவிட வேண்டும்.
 9. தயாரானதும், உடனடியாக ஒரு தட்டில் போட்டு அதை சமமான மெல்லிய அடுக்காக செய்துக் கொள்ளவும்.
 10. இதனை 1.5-2 அங்குல அளவில் வெட்டி அது ஆறியவுடன் உடனடியாக உருட்டிக் கொள்ளவும். துண்டு மிகவும் நிளமாக இருந்தால் அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். எல்லா துண்டுகளும் சரியான அளவில் வரும் வரை உருட்டிக்கொள்ளவும்.
 11. ஒரு சிறு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சேர்த்துக்கொள்ளவும். அது பொரிய ஆரம்பித்ததும் பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். பின் மிளகாய்தூள் சேர்த்துக் கொண்டு அதனை உடனடியாக தீயில் இருந்து எடுத்து சுருட்டிவைத்த மீது கஹந்தவி ஊற்றவும்.
 12. வெட்டப்பட்ட கொத்தமல்லி மற்றும் ஏள் ஆகியவற்றை அதன் மீது துவி சூடாக பரிமாறவும். இதை தேங்காய் துருவல் கொண்டு அழகுப்படுத்தலாம்.

Reviews for Khandvi in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.