வீடு / சமையல் குறிப்பு / வ்ராப்டு பைன்ஆப்பிள்(ஆரோக்கியமான ப்ரெக்பாஸ்ட்)

Photo of wrapped pineapple by Bhavani Murugan at BetterButter
195
2
0.0(0)
0

வ்ராப்டு பைன்ஆப்பிள்(ஆரோக்கியமான ப்ரெக்பாஸ்ட்)

Mar-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வ்ராப்டு பைன்ஆப்பிள்(ஆரோக்கியமான ப்ரெக்பாஸ்ட்) செய்முறை பற்றி

ஆரோக்கியமான ப்ரெக்பாஸ்ட். . இதில் பால், முட்டை, பழம், சத்துமாவு என்று அனைத்து சத்துகளும் இருக்கிறது. ஆரோக்கியமான உணவு என்றாலும் அட்ராக்டிவ்வா இல்லை என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டர்கள். பரிட்சை ஸ்டிரஸில் இருக்கும் குழந்தைகளுக்கு கலர்புல் உணவு பார்த்தால் ஸ்டிரஸ் ரிலீப் ஆகும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சத்துமாவு - 1கப்
  2. நட்ஸ் (பாதாம், முந்தரி, வேர்கடலை, வால்நட்)-1/2கப்
  3. பால் - 2கப்
  4. முட்டை - 1(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  5. கோதுமை மாவு - 1கப்
  6. அண்ணாச்சி பழம் - 1
  7. செர்ரி - 10
  8. சர்க்கரை /வெல்லம் - 4மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. சத்துமாவு, கோதுமை மாவு சேர்த்து கிளறவும்
  2. பிறகு அதனுடன் முட்டை, பால், சர்க்கரை, நட்ஸ் சேர்த்து சப்பாத்தி மாவு பத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பிறகு சப்பாத்தி இட்டு அதை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  4. பிறகு அண்ணாச்சி பழத்தை இவ்வாறு நறுக்கிக் கொள்ளவும்
  5. பிறகு சப்பாத்தி துண்டுகளை அண்ணாச்சி பழத்தில் நடுவில் உள்ள துளை வழியாகஅதன் மேல் சுற்றிக் கொள்ளவும்.
  6. பிறகு ஓவனில் பேக் செய்யலாம் அல்லது டவாவில் இருபுறமும் மாற்றி போட்டு டோஸ்ட் செய்யவும்..
  7. வ்ராப்டு பைன்ஆப்பிள் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்