வீடு / சமையல் குறிப்பு / இரும்புச்சத்து நிறைந்த குக்கீஸ்

Photo of Ironrich Cookies(Soft n chewy) by Ayesha Ziana at BetterButter
180
3
0.0(0)
0

இரும்புச்சத்து நிறைந்த குக்கீஸ்

Mar-27-2018
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

இரும்புச்சத்து நிறைந்த குக்கீஸ் செய்முறை பற்றி

கறிவேப்பிலை, கறுப்பு முழு உளுந்து, பேரீட்சை, தேங்காய் என இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை வைத்து செய்த சாஃப்டான ச்யூவி(chewy) குக்கீஸ். இது உடைக்காமல் மென்று சாப்பிடும் chewy வகையறா குக்கீஸ் ரெசிபி. ரொம்பவே ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கறிவேப்பிலை 3 மீடியம் சைஸ் கொத்து
  2. கறுப்பு முழு உளுந்து 1/2 கப்
  3. பேரீட்சை பழங்கள் 30 முதல் 40
  4. கோதுமை மாவு 1 கப்
  5. துருவிய தேங்காய் 1/2 கப்
  6. பால் 5 ஸ்பூன்
  7. பேக்கிங் சோடா/பவுடர் 2 பின்ச்
  8. ஏலக்காய் பொடி 1 ஸ்பூன் நிறைய
  9. உப்பில்லாத மென்மையான வெண்ணெய் 50 கிராம்
  10. கறுப்பு எள் தேவைக்கு

வழிமுறைகள்

  1. கறுப்பு முழு உளுந்தை வெறும் வாணலியில் 2 நிமிடங்கள் வறுத்து மிக்ஸியில் நைஸாகப் பொடிக்கவும்.
  2. பேரீட்சை பழங்களை விதை நீக்கி, சற்று மூழ்கும் அளவு மிகச் சூடான நீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  3. துருவிய தேங்காயை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும். இதைத் தனியே வைக்கவும்.
  4. மிக்ஸியில் ஊற வைத்த பேரீட்சை பழங்கள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து மை போல அரைக்கவும். (தேவைப்பட்டால் 1-2 ஸ்பூன் பேரீட்சை ஊற வைத்த நீரும் சேர்த்து அரைக்கலாம்).
  5. ஒரு பவுலில் கறுப்பு உளுந்து மாவு, பொடித்த தேங்காய் துருவல், கறிவேப்பிலை+பேரீட்சை விழுது, கோதுமை மாவு, பால், வெண்ணெய், ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். சாஃப்டான மாவு கிடைக்கும்.
  6. மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சற்று பிளாட் டாக தட்டி, வெண்ணெய் தடவிய அலுமினியம் பேக்கிங் டின்னில் வைக்கவும். இது மாதிரி மேலும் சில உருண்டைகளைத் தட்டி, பேக்கிங் டின்னில் ஒவ்வொன்றுக்கும் இடையில் சற்று இடைவெளி விட்டு அடுக்கவும்.
  7. பின்னர் ஒவ்வொரு தட்டிய உருண்டையின் மேலும் சிறிது கறுப்பு எள்ளைத் தூவி லேசாக அழுத்தவும்.
  8. பின்னர், அவன் அல்லது மணல் பரப்பி 10 நிமிடங்கள் ஹை தீயில் முற்சூடு செய்யப்பட்ட ப்ரஷர் குக்கரில், பேக்கிங் டின்னை வைத்து 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து பேக் செய்யவும்.
  9. இது மாதிரி மீதமுள்ள மாவையும் அடுக்கு அடுக்காக பேக் செய்யவும்.
  10. சூப்பரான ஆரோக்கியமான சாப்ட் அண்ட் ச்யுவி குக்கீஸ் தயார். இது குழந்தைகளுக்கு காலை/மாலை பண்டமாகப் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்