நட்ஸ் டோக்ளா | Nuts Dhokla in Tamil

எழுதியவர் Ayesha Ziana  |  27th Mar 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
 • Photo of Nuts Dhokla by Ayesha Ziana at BetterButter
நட்ஸ் டோக்ளாAyesha Ziana
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

0

1

நட்ஸ் டோக்ளா recipe

நட்ஸ் டோக்ளா தேவையான பொருட்கள் ( Ingredients to make Nuts Dhokla in Tamil )

 • நட்ஸ்(பாதாம், நிலக்கடலை, பொரிகடலை, முந்திரி எல்லாம் சேர்த்து) 1 கப்
 • கோதுமை ரவை 1/4 கப்
 • மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
 • தயிர் 100 கிராம்
 • மோர் தேவைக்கு
 • தண்ணீர் தேவைக்கு
 • உப்பு தேவைக்கு
 • பேக்கிங் சோடா 1/4 ஸ்பூன்
 • எலுமிச்சை 1/4
 • எண்ணெய் தேவைக்கு
 • தாளிக்க: எண்ணெய் சிறிதளவு
 • கடுகு 2 ஸ்பூன்
 • பெருங்காயத்தூள் 2 பின்ச்
 • பச்சை மிளகாய் 2
 • அலங்கரிக்க: தேங்காய் துருவல் தேவைக்கு
 • கொத்தமல்லித்தழை சிறிதளவு

நட்ஸ் டோக்ளா செய்வது எப்படி | How to make Nuts Dhokla in Tamil

 1. கோதுமை ரவையை வெறும் வாணலியில் லேசாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
 2. மிக்ஸியில் நட்ஸ் எல்லாவற்றையும் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும்.
 3. ஒரு பவுலில் நட்ஸ் பொடி, கோதுமை ரவை, தயிர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இட்லிமாவு பதம் வரும் வரை தேவைக்கு மோரும் தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் எலுமிச்சை சாறும் சேர்த்து 1/2 மணி நேரம் வைத்திருக்கவும்.
 4. ஒரு குழிக்கரண்டியில் 1 ஸ்பூன் எண்ணெய், 1 ஸ்பூன் தண்ணீர், பேக்கிங் சோடா சேர்த்து கலந்து தீயில் 30 வினாடிகள் காட்டவும். பின்னர் இதை உடனே பவுலில் இருக்கும் கலவையோடு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.(இந்த ஸ்டெப்க்கு பதிலாக 1/2 ஸ்பூன் ஈனோ ப்ரூட் சால்ட் ஐ நேரடியாக மாவுக்கலவையில் சேர்த்து விட்டு அடுத்த ஸ்டெப்பைத் தொடரலாம்).
 5. பின்னர் உடனே மாவுக்கலவையை இட்லித்தட்டிலோ அல்லது ஸ்டீல் தட்டிலோ ஊற்றி 15 முதல் 25 நிமிடங்கள் ஆவியில் அவித்து எடுக்கவும். இடையே வெந்து விட்டதா என கத்தியை வைத்து குத்தி ஒட்டாமல் வந்தால் வெந்தது என தெரிந்து கொள்ளலாம்.
 6. பின்னர் சதுரத்துண்டுகளாக வெட்டி பிளேட்டில் வைக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை வைத்து தாளித்து, துண்டுகளின் மேல் ஊற்றவும். இறுதியாக தேங்காய் துருவல், கொத்தமல்லி வைத்து அலங்கரிக்கவும்.
 7. சூப்பர் சுவையில் புரோட்டின் நிறைந்த டோக்ளா தயார். இதைக் காலை/மாலை உணவாகக் கொடுக்கலாம். இதனுடன் விருப்பமான சட்னி/ஹோம் மேட் சாஸ் சேர்த்து பரிமாறலாம்.

எனது டிப்:

நட்ஸ் பொடியை லேசாக வறுத்தும் செய்யலாம். விருப்பமான நட்ஸ் சேர்க்கலாம்.

Reviews for Nuts Dhokla in tamil (1)

Jayalakshmi a year ago

Super easy recipes
Reply
Ayesha Ziana
a year ago
Tnk u so much mam :)
Ayesha Ziana
a year ago
Tnk u so much mam ;)