வீடு / சமையல் குறிப்பு / ராகி பால் கஞ்சி

Photo of Ragi milk porridge by saranya sathish at BetterButter
571
6
0.0(0)
0

ராகி பால் கஞ்சி

Mar-28-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி பால் கஞ்சி செய்முறை பற்றி

ஊறவைத்த ராகியை அரைத்து பால் எடுத்து செய்த கஞ்சி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ராகி - 1/2 கப்
  2. பனை வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
  3. நெய் - 5 டேபிள் ஸ்பூன்
  4. தண்ணீர் - அரைக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகியை எடுத்து நிறைய நீர் சேர்த்து கைகளால் தேய்த்து நன்கு கழுவவும்.
  2. ராகி முற்றிலும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய 4 முதல் 5 தடவை செய்யுங்கள்.
  3. பின் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். மிக்ஸியில் ஊறவைத்த ராகியை சேர்த்து நீர் ஊற்றி ஒரு மென்மையான பேஸ்ட் போல அரைக்க வேண்டும்.
  4. பின் ஒரு சுத்தமான பாத்திரத்தில், ஒரு வெள்ளை துணியை வைக்கவும். துணி மீது அரைத்த ராகியை ஊற்றி பிழியவும்.இதே போல் 3,4 முறை செய்யவும்.
  5. பின் ராகியில் இருந்து எடுக்கபட்ட பாலை அடி கனமான கடாயில் ஊற்றி தண்ணீர் சிறிது ஊற்றி குறைந்த தீயில் கைவிடாமல் 10 - 15 நிமிடம் கிளறவும்.
  6. பின் பனை வெல்லம் நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
  7. குழந்தைகள் மூதல் பெரியவர்கள் வரை அனைவரும் அருந்தலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்